வேலூர், ஆக. 1–

வேலூர் மாவட்ட கலெக்டர் நந்தகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

குவைத் நாட்டில் வீட்டு வேலைகளுக்காக செல்லும் இந்திய பெண்கள் மிகக்குறைந்த ஊதியத்தில் அதிகப் பளுவுடன் கூடிய படுமோசமான சூழ்நிலைகளில் வேலைகள் செய்ய கட்டாயப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும் அங்கீகரிக்கப்பட்டுள்ள வேலை நேரம் மற்றும் விடுமுறை போன்ற சலுகைகள் மறுக்கப்படுவதாகவும், குவைத் நாட்டில் தொழிலாளர் நலச்சட்டங்கள் அயல்நாட்டு தொழிலாளர்களுக்கு சரியான முறையில் வகுக்கப்படாத நிலையில் இந்த குறைகளை நிவர்த்தி செய்யக்கோரி ஏராளமான பெண்கள் இந்திய தூதரகத்தை நாடி செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணத்தை செலவழித்து இதுபோன்ற பணிகளில் சேர்ந்து துன்பப்படுவதாக குவைத்துக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. எனவே, வெளிநாட்டு வேலை, அதிக சம்பளம் என்று நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.