சென்னை, ஆக.1-

பொறியியல் பட்டப்படிப்பு தகுதித்தேர்வுக்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதில் முன்னிலையில் உள்ள கேட்ஃபோரம், சர்வதேச சேர்க்கைகள் மற்றும் ஜிஆர்இ, ஜிஎம்ஏடி, சாட் உள்ளிட்ட படிப்புகளுக்கு இந்திய மாணவர்களுக்கு தொழில் உரிமத் தேர்வுக்கான பயிற்சி அளிக்க இதில் உலகளவில் முன்னணியில் உள்ள கப்லானுடன் கூட்டுத்திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தத்தில் கேட்ஃபோரம் இயக்குநர் ஆதித்ய ரெட்டி, கப்லான்  பொதுமேலாளர் பாரத் கிருஷ்ணா ஆகியோர் கையெழுத்திட்டனர். இதன் படி இந்திய மாணவர்களுக்கு நேரடியாக கப்லான் சான்றிதழ் பெற்ற கல்விச் சேவையை அளிக்கும்.மேலும் ஆன்லைன் படிப்புகளையும் அளிக்கும்.

இதுபோன்று அடுத்த ஐந்தாண்டுகளில் சுமார் 40ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க கேட் ஃபோரம் திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.