தாம்பரம், ஆக. 1-

சேலையூர் அருகே கௌரிவாக்கம் 2வது தெருவைச் சேர்ந்தவர் நாராயணசாமி (68). இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார். நாராயணசாமி வெள்ளிக்கிழமை மாலை தனது குடும்பத்தினரோடு கோயிலுக்குச் சென்றார். இரவு கோயில் இருந்து வீட்டுக்குத் திரும்பி வந்தார்.

அப்போது வீட்டின் கதவு பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 10 சவரன் நகைகள், 10 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சேலையூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்திருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: