அரக்கோணம், ஆக 1 —

திருத்தணி அம்மையார் குப்பம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் தணிகைவேல் ( 34). இவர் சென்னையில் உள்ள ரயில்வே கூட்டுறவு வங்கியில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சனிக்கிழமையன்று (ஆக.1) தணிகைவேல், அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வந்தார். பிறகு அங்கிருந்து ரயில் நிலையம் அருகே உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், அவர்  மீது மோதி நிற்காமல் சென்றது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்துக் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: