சென்னை, ஆக1-

மீன் மார்க்கெட்டுகளில் மீன்பதப்படுத்தும் வசதியும் போதுமான சுகாதார வசதிகளும் அமைத்துத்தர வேண்டும் என சென்னை செங்கை  மீன்பிடித் தொழிற்சங்க பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை செங்கை மீன்பிடித் தொழிற்சங்கம் 18ம் ஆண்டு பேரவைக் கூட்டம் வெள்ளியன்று (ஜூலை31) காசிமேடு விநாயகபுரத்தில் நடைபெற்றது. சங்க நிர்வாகி ஸ்ரீதர் தலைமை தாங்கினார். டி.வெங்கட் வரவேற்றார். வேலை அறிக்கையை பொதுச் செயலாளர் வீரஅருண், நிதி அறிக்கையை கே.செல்வானந்தம் சமர்பித்தனர். தமிழ்நாடு மீன்பிடி தொழிற் சங்க கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் சி.ஆர். செந்தில்வேல் துவக்கவுரையாற்றினார். சிஐடியு மாவட்ட இணை செயலாளர் சி. திருவேட்டை நிறைவுரையாற்றினார்.

தீர்மானம்:

மீனவர்கள் வாழ்வுரிமையை பறிக்கும் மீனாக்குமாரி பரிந்துரையை மத்தியஅரசு திரும்ப பெற வேண்டும், மத்திய அரசு வெளியிட்டுள்ள மீனவர்களை பாதிக்கும் அரசாணையை வாபஸ் பெற வேண்டும். சென்னையில் வாழும் உள்நாட்டு மீனவர்களுக்கும் , மீன் விற்பனையாளர்களுக்கும் தனியாக மீனவர் கூட்டுறவு சங்கம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள்:

சென்னை செங்கை மீன்பிடித் தொழிற்சங்கம் தலைவராக வீர.அருண், பொதுச்செயலாளராக இரா.லோகநாதன், பொருளாளராக பால்ராஜ் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். நிறைவாக செல்வம் நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: