சென்னை,ஆக. 1-
அமைப்பு சாரா ஆதாரங்களில் இருந்து பணத்தை கடனாக வாங்குவதில் உள்ள ஆபத்துக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தன்சாயத் என்ற கல்விக்கான திரைப்படத்தை ஹெச்டிஎஃப்சி வங்கி தயாரித்துள்ளது.

தூய்மையான மற்றும் வசதியான வங்கிப் பணிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஸ்வச் பேங்கிங் இயக்கத்தின் ஒரு பகுதியாக  “தன்சாயத்’’ என்ற  வீடியோபொருத்தப்பட்ட வாகனங்களில் இந்த திரைப்படம் காட்டப்படும். இந்த திரைப்படத்தின் மூலமாக தனிநபர்களின் கடன் வாங்கும் நடைமுறைகளில்  வெளிப்படைத்தன்மை, கண்ணியம், சுயமரியாதை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

இந்த வாகனங்கள் மக்கள் அதிகம் கூடும் கடைவீதிகள், மேளாக்கள் மற்றும் கிராமப் பஞ்சாயத்துக்களில் நின்று செல்லும்என்று இதனை துவக்கிவைத்தவங்கியின் நிர்வாக இயக்குனர் ஆதித்யா பூரி மற்றும் துணை நிர்வாக இயக்குனர் பரேஷ் சுக்தன்கர் ஆகியோர் தெரிவித்தனர்.

Leave A Reply