அம்பத்தூர், ஆக. 1-

அம்பத்தூர் வெங்கடாபுரம் சத்சங்கம் தெருவில் வசிப்பவர் குபேரன் (41). இவர் அம்பத்தூர், கிண்டி உள்ளிட்ட தொழிற்பேட்டை  பகுதிகளில் டீல் மற்றும் ஆயில் வாங்கி விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மதியம் சுமார் 3 மணியளவில் அம்பத்தூர் தொழிற் பேட்டையில் ஒருவரிடம் இருந்து 3.5 லட்சரூபாய் பணத்தை வாங்கி, ஒருபேக்கில் போட்டு மொபெட்டின் முன் பகுதியில் உள்ள கொக்கியில் மாட்டிக் கொண்டு அம்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

டன்லப் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த அவரது தாயை மொபட்டில் ஏற்றிக் கொண்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவமனைக்கு சென்றதும் வண்டியில் இருந்த பணப்பையை எடுக்காமல் தாயை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு உள்ளே சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்த போது, மொபட்டில் வைக்கப்பட்டிருந்த பணப் பை திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து குபேரன் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.