சென்னை, ஆக. 1-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை பெரம்பூர் பகுதிக்குழு உறுப்பினர் எம்.வசந்தகுமார் தாயார் எம்.நாகபூஷணம் வெள்ளியன்று (ஜூலை31)  இரவு மாரடைப்பால் காலமானார் அவருக்கு வயது 80.

அன்னாரது உடலுக்கு சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், மாநிலக்குழு உறுப்பினர் கே.கிருஷ்ணன், வடசென்னை மாவட்ட செயலாளர் எல்.சுந்தரராஜன், பெரம்பூர் பகுதிச் செயலாளர் விஜயன் மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் வெகுஜன அமைப்பினர் ஏராளமானோர் மலரஞ்சலி செலுத்தினர்.

எம்கேபி நகர் 16வது தெருவில் அன்னாரது இல்லத்திலிருந்து சனிக்கிழமையன்று மாலை இறுதி ஊர்வலம் புறப்பட்டு வியாசர்பாடி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: