ஓசூர், ஆக. 1 –

ஓசூர் நகராட்சிக்குட்பட்ட மத்தகிரியில் 1650 ஏக்கர் பரப்பளவில் கால்நடைப் பண்ணை மற்றும் கல்லூரி உள்ளது. இந்தப் பண்ணை 1924ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இங்கு உயர் தர ஆடு, மாடுகள், பன்றிகள் வளர்க்கப்படுகிறது. இந்த இடம் ஆராய்ச்சி மையமாகவும் விளங்குகிறது.

இந்நிலையில், கடந்த 29ந்தேதி 13க்கும் மேற்பட்ட உயர் தர மாடுகளை நோய் தாக்கியதாக கூறப்படுகிறது. அந்த மாடுகளை பண்ணையின் பின்பகுதியில் ஆழமான குழிதோண்டி அதில் போட்டு எரித்துள்ளனர்.

இது குறித்து பண்ணையின் இயக்குநரிடம் கேட்டபோது, மாடுகளுக்கு மஞ்சள் காமாலை வந்துவிட்டது மற்றும் கால்நடைகளுக்கு பரவாமல் தடுக்க இது போல் செய்வது வழக்கம் என்று கூறினார். இதுபோல் பல முறை மாடுகள், பண்றிகள் எரிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். இது பற்றி மாவட்ட ஆட்சியர் கூறுகையில்,  கால் நடைகள் இறந்தது பற்றியும், எரிக்கப்பட்டது பற்றியும் எந்த தகவலும் தமக்கு தெரிவிக்கப்படவில்லை. இது பற்றி உரிய விசாரணை நடத்தப்படும் என்றார்.

Leave A Reply