சென்னை, ஆக. 1-

குமரன்நகர் கோவிந்தன் தெருவில் அழகுநிலைய நிலையம் நடத்தி வருபவர் ஜான்சி (36). இவர் வெள்ளிக்கிழமை அழகு நிலையத்தில் இருக்கும்போது, அங்கு வந்த மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ரவுடி சிவா (40), பணம் கேட்டு மிரட்டிச்சென்றாராம்.

உடனே ஜான்சி, ரவுடி பணம் கேட்டு மிரட்டியது குறித்து குமரன்நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, ரவுடி சிவாவை உடனடியாக கைது செய்தனர்.

Leave A Reply

%d bloggers like this: