திருவள்ளூர், ஆக.1-

திருவள்ளூர் மாவட்டத்தில் 19 பள்ளிகளின் அங்கீகாரத்தை தமிழக அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. மாணவர்களை சேர்க்க வேண்டாம் என பெற்றோர்களை மாவட்ட கல்வித்துறை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் போதிய குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, விளையாட்டு மைதானம் மற்றும் உரிய சான்று இல்லாமல் செயல்படும் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாத 19 பள்ளிகள் கண்டறியப்பட்டு அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட பள்ளிகளின் விவரம்: சித்தார்தா அத்திமாஞ்சேரிப் பேட்டை – கொடிவலசா, ஸ்ரீபாலாஜி த்யாமந்தீர் – நசரத்பேட்டை, ஜெய்மாருதி – திருப்பாச்சூர், வெங்கடேஸ்வரா – திருத்தணி, எக்ஸ்சர்வீஸ்மேன் -பட்டாபிராம், ஜூடு இங்கிலீஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி- ஆலத்தூர், ஸ்ரீதேவி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி- திருவேற்காடு. சரஸ்வதி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, கிரேஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி – போரூர், ஸ்ரீஅம்மன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி -பாடி. ஸ்ரீராம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி -மேனாம்பேடு, ஸ்ரீமகாலட்சுமி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி- திருவேற்காடு, அன்னை மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி – கலெக்டர் நகர், சில்ரன் கார்டன் – மணலி, ஆ.வே. மரியா – மாதவரம், விவேகானந்தா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி – புழல்,சில்ரன் கிங்டம் – மாத்தூர், அன்னை தெரசா – பெருமாள்பட்டு, ராஜாமகேஸ்வரி – திரூர் ஆகிய  பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டாம் என பெற்றோர்களை மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.