விழுப்புரம், ஆக 1-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளருமான ஏ.வி.ஸ்டாலின்மணி தாயார் வி.ஜெயம் அம்மாள் சனிக்கிழமையன்று காலை உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75.

அவரின் மறைவுக்கு கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன் ஆகியோர் தொலைபேசி வாயிலாக  ஸ்டாலின்மணியிடம் இரங்கல் தெரிவித்தனர்.

விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் டி.ஏழுமலை, வடக்கு மாவட்ட செயலாளர் கே.கலியன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.இராமமூர்த்தி மற்றும் இரு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு, இடைக்குழு செயலாளர்கள், விவசாயிகள் சங்க நிர்வாகிகள், கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் நேரில் அஞ்சலி செலுத்தினர். அன்னாரது உடல் கள்ளக்குறிச்சி வட்டம் வடதொரசலூர் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது

Leave A Reply

%d bloggers like this: