சென்னை, ஆக.1-
டோஸ்ட்மாஸ்டர்ஸ் இன்டர் நேஷ்னல் அமைப்பின் தென்னிந்திய மற்றும் இலங்கை பகுதி தலைவராக சென்னையை சேர்ந்த 28 வயது இளைஞர் சாஸ்தாராம் பொறுப்பேற்றுள்ளார்.கல்வி மற்றும் பயிற்சிபிரிவை இவர் கவனித்துக்கொள்வார். டோஸ்மாஸ்டர்ஸ் என்ற அமைப்பு லாபநோக்கமற்ற ஒரு சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனமாகும்.

இவர் அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை இந்த பொறுப்பில் இருப்பார். தனது பதவிக்காலத்தில் இவர் இந்தியா மற்றும் இலங்கையின் இரண்டாம் நிலைமற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கு செல்ல இருக்கிறார்.

அங்கு இளைஞர்களை சந்தித்து ஆளுமைத்திறனை வளர்த்துக்கொள்வது குறித்தும் சிக்கலான பிரச்சனைகளை கையாளுதல் குறித்தும் ஆலோசனை மற்றும் பயிற்சிஅளிக்கவுள்ளார்.

Leave A Reply