விழுப்புரம், ஆக.2–

உளுந்தூர்பேட்டை அருகே இடி தாக்கியதில் முதியவர் உடல் கருகி பலியானார். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் இடி–மின்னலுடன் இரவு நேரத்திலும் பலத்த மழை கொட்டியது. உளுந்தூர்பேட்டை அருகே பின்னலவாடி கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் (75) என்பவர் தனது கூரை வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது நள்ளிரவு 12.30 மணிக்கு கோவிந்தன் வீட்டில் இடி விழுந்தது. இந்த வீடு தீப்பிடித்து எரிந்தது. மேலும் இடிதாக்கியதில் கோவிந்தன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Leave A Reply