விழுப்புரம், ஜூலை 31 –

கடந்த 13 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டத் தலைவர் பி.லாரன்ஸ் தலைமை தாங்கினார்.  பி. கணபதி, ஏ.பி. கிருஷ்ணன், கே. பழனிசாமி, எம். அய்யனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.ஜெயராமன், கோட்ட செயலாளர் பி. முத்து, மாநில செயலாளர் வி. கணேசன், பொதுச் செயலாளர் எம். பாலசுப்ரமணி, பொருளாளர் ஆர்.தமிழ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ஆர். ரவிக்குமார், ஆர்.வெள்ளதுரை, எம்.பழனிவேல், ஏ.விஸ்வநாதன், எஸ்.சரவணன், ஏ.சாமிதுரை, எம்.தண்டபானி, பி.செல்லதுரை, ஏ.கோவிந்தராசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.