வேலூர், ஜூலை 31-

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை சேர்ந்தவர் மலர் (40). வழிப்பறி வழக்கு தொடர்பாக ஆற்காடு தாலுகா போலீசார் கடந்த 2012–ம்ஆண்டு கைது செய்தனர். பின்னர் வேலூர் பெண்கள் மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைத்தனர்.

இந்த நிலையில் மலருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக கடந்த 20–ந்தேதி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேலூர் பெண்கள் மத்திய சிறை கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில், பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: