சென்னை, ஜுலை 31-

எந்திரவியலில் பொறியியல் (ஹானர்ஸ்) பட்டப்படிப்பு, மின்சாரம் மற்றும் மின்னணுவியலில் பொறியியல் மற்றும் அறிவியல் திட்ட நிர்வாகவியல் ஆகிய 3 முதுகலைப் பட்டப்படிப்புகளை சிங்கப்பூர் எம்டிஐஎஸ் பல்கலைக் கழகம் அறிமுகம் செய்துள்ளது.

இந்தப் படிப்புகளை இங்கிலாந்து நாட்டில் நார்த்தும்ப்ரியா பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்குகிறது. முதல் கட்ட மாணவர் சேர்க்கை இவ்வாண்டு செப்டம்பர் மாதம் தொடங்குகிறது.

இரண்டு பொறியியல் பட்டப்படிப்புகளுக்கும் குறைந்தபட்ச வயது 18 ஆகும்.சம்மந்தப்பட் பொறியியல் பிரிவில் பட்டப்படிப்பு, கணிதம் மற்றும் குறைந்த பட்சம் ஒரு அறிவியல் பாடத்துடன் ஜிசிஇ ஏ கிரேடு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த இரண்டு படிப்புகளுக்கான காலம் 2 ஆண்டுகள் ஆகும். அறிவியல் திட்ட நிர்வாகவியலில் முதுகலை பட்டப்படிப்புக்கான காலம் 1 ஆண்டு ஆகும் என்று எம்டிஐஎஸ் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.