தமிழக அரசின் விலையில்லா பொருட்களான மிக்சி, கிரைண்டர்,  மின் விசிறிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி  நகராட்சி 33 வார்டுகளை  கொண்டது. சுமார் 70 ஆயிரம் பேர்வசிக்கின்றனர்.

இவர்களில் 25 ஆயிரம் பேர் குடும்ப அட்டை உடையவர்கள். ஆதில் பெரும் பகுதி கூலி தொழிலாளிகள். வறுமை கோட்டிற்கு கீழ் அதிகம் உள்ளனர். இவர்களுக்கு அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறிகள் இதுவரை வழங்கவில்லை. அனைவருக்கும் மிக்சி, கிரைண்டர் வழங்கக்கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நகரச் செயலாளர் ஜி. லெனின் தலைமை தாங்கினார். மாநிலக்குழுஉறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, என். அமிர்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ஜோதிபாசு, எஸ்.கிரைஸாமேரி, நகர மன்ற உறுப்பினர் பி.மோகன், நகரக்குழு உறுப்பினர்கள் வி.பி.சாமிநாதன், ஏ.ஜெயா, வி.மார்க்ஸ், பி.சங்கர்,டி.ஜே.வேலவன் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

Leave A Reply