உடன் பணிபுரியும் மற்றும் கீழ்நிலையில் பணி புரியும் பெண் ஊழியர்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தவருவாய் வட்டாட்சியர் மீது நடவடிக்கை கோரி பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்கள் வருவாய் கோட்டாட்சியரிடமும்,  மாவட்ட ஆட்சியரிடமும் புகார் மனு அளித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்தில் வருவாய் வட்டாட்சியராக பணிபுரியும் சேகர், உடன் பணி புரியும் பெண் ஊழியர்களை ஒருமையில் அழைப்பது, இரட்டை, அர்த்தத்தில் பேசுவது, இதனை தவிர்க்கும் பெண் ஊழியர்களை “சஸ்பெண்ட்” செய்து விடுவேன் என மிரட்டுவது என தொடர்ந்து அட்டூழியம் செய்து வந்துள்ளார்.

திருக்கோவிலூர் வட்டத்தில் பணிபுரிந்து வந்தவர் பெண் கிராம உதவியாளர் ராஜாமணி (பெயர்மாற்றப்பட்டுள்ளது.) இவர் ஆதிதிராவிட கிருத்துவ இனத்தை சேர்ந்தவர். ராஜாமணிக்கு பொறுப்பான கிராம நிர்வாக அலுவலர் முருகன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை தவிர்த்து வந்த ராஜாமணி தொல்லை பொறுக்க இயலாமல் மேல் அதிகாரியான திருக்கோவிலூர் வருவாய் வட்டாட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இதன்பின் வி.ஏ.ஒ. முருகனை அழைத்து கண்டித்த வட்டாட்சியர் சேகர், பின் ராஜாமணியிடம் “இனி இப்படி நடக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன். இரவு என் குவார்ட்டர்ஸ்க்கு வா” என தவறானவார்த்தைகள் கூறி அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜாமணி “நீங்களும் இப்படியா” என வேதனையோடு கூறிவிட்டு வந்துவிட்டார். ஆனால் தொடர்ந்து போனில் வட்டாட்சியர் தொந்தரவு செய்யவே அவர் பேசியதை பதிவு செய்து பின் கோட்டாட்சியரிடம் எழுத்து மூலமான புகார் தெரிவித்துள்ளார்.

இதனை தெரிந்து வட்டாட்சியர் சேகர் மீண்டும் ராஜாமணிக்கு போன் செய்து “என்னைப் பற்றி ஆர்.டி.ஓவிடம் போட்டுக்கொடுத்துவிட்டாயா?” எழுத்து மூலமாக புகார் கொடுத்தாயா? என கேட்டுள்ளார்.இதனை கேள்விப்பட்டு நாம்விசாரித்த போது“இவர் பெண் ஊழியர்கள் பலருக்கும் இப்படி தொல்லை தந்துள்ளார். பலருக்கு அநியாயமாக வீண் தண்டனைகிடைக்கச் செய்துள்ளார்.

இவர் மீது தற்போது ஒரு பெண் வி.ஏ.ஒ, ஒரு அலுவலக உதவியாளர், மேலும் ஒரு கிராம உதவியாளர்என பல பெண் ஊழியர்கள் புகார் செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் சிலபெண் மற்றும் ஆண்ஊழியர்கள் வட்டாட்சியருக்கு இப்படிப்பட்ட வேலைகளில் உடந்தையாக உள்ளதாகவும், தற்போது இப்பிரச்சனையை பணம்கொடுத்து சரிக்கட்ட முயற்சிப்பதாகவும் தெரிகிறது. பல வகையிலும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு தான் இந்த தொல்லைகள் என்றால் அரசு பொறுப்பில் உள்ள முருகன், சேகர் போன்ற சில தவறான நடத்தை கொண்ட அதிகாரிகளாலும் இப்படி நடப்பது என்பது பேரதிர்ச்சியான விஷயமாக உள்ளது.

அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் இப்படிப்பட்ட குறைகளை போக்க அங்கேயே புகார்க்கமிட்டி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை திருக்கோவிலூர் பெண் கோட்டாட்சியர்பாரதிதேவி, விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலர் பிருந்தாதேவி, பெண்ஆட்சியர் லட்சுமி, என்ற நிலையில் உள்ள பொறுப்பான அதிகாரிகளும், பெண்முதல்வரும் உடன் செயல்படுத்தி அப்பாவி பெண்ஊழியர்களை பாதுகாத்திட வேண்டும். வி.ஏ.ஒ முருகன் மீதும், வட்டாட்சியர் சேகர் மீதும் துறை ரீதியான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

Leave a Reply

You must be logged in to post a comment.