திருவொற்றியூர், ஜூலை 31-

திருவொற்றியூர் அம்சா தோட்டத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார். இவரது மனைவி செண்பகவல்லி. வியாழனன்று இரவு டியூசன் படிக்க சென்ற தனது மகளை கூப்பிட அதே பகுதியில் உள்ள வடக்கு மாடவீதிக்கு சென்றார்.

அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் செண்பகவல்லி கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை பறித்து சென்றனர். இதன் மதிப்பு ரூ.1.5 லட்சம் ஆகும். இது குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Leave A Reply

%d bloggers like this: