தாம்பரம், ஜூலை 31-

தாம்பரம் கடத்தேரியை சேர்ந்தவர் சதீஷ்பாபு (25). அதே பகுதியில் தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மன்னார்குடியை சேர்ந்தவர் அறிவுகொடி. தாம்பரம் கடத்தேரியில் அறை எடுத்து தங்கி அருகே உள்ள மற்றொரு ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

சதீஷ்பாபுவும், அறிவுக்கொடியும் ஒரே பகுதியில் வேலை பார்ப்பதால் நட்பு ஏற்பட்டு பின்பு காதலமாக மாறியது. 2 பேரின் பெற்றோரின் சம்மதத்துடன் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.திருமணத்துக்கு பின்னர் தான். அறிவு கொடியின் வயது 29 என்பது சதீஷ்பாவுக்கு தெரியவந்தது.

இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 28–ந் தேதி அறிவுகொடி வேலை முடித்து வீட்டுக்கு வந்தார். அப்போது சதீஷ்பாபுக்கும் அவருக்கு இடையே தகராறு ஏற்பட்டு முற்றியது.

இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ்பாபு காதல் மனைவி அறிவுகொடியின் தலையை பிடித்து சுவரில் மோதினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழனன்று உயிரிழந்தார்.

இது குறித்து தாம்பரம் காவல்நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து சதீஷ்பாபுவை கைது செய்தனர். திருமணமாகி 3 மாதமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: