வேலூர் மாவட்டம், ஜவ்வாது மலையான புதூர் நாடு கிராமத்திலிருந்து நெல்லி வாசல் நாடு வரை செல்லும் சாலைகள் காமராசர்  முதல்வராக இருந்த காலத்தில் போடப்பட்டது. இப்போது இந்த சாலைகள் கேட்பார் அற்றுக்கிடக்கிறது.

இந்தப் பகுதியில் இருக்கும் பெரியவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால்  மருத்துவமiக்கு  அழைத்து செல்ல வேண்டும் என்றால் தூளிகள்  கட்டி அதில் அவர்களை அமரவைத்து தூக்கிச் செல்கின்றனர். இப்போதும் இந்த நிலைதான் அங்கு தொடர்கிறது.

தரமான சாலைகளை அரசாங்கம் செய்து கொடுத்தால் 108   போன்ற சேவைகள் எங்கள் கிராமத்திற்கு வந்து போகும். நாங்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்வோம் என ஏக்கத்துடன் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மலைக் கிராமங்களில்  60  விழுக்காட்டிற்கு மேல்சாலை வசதிகள் செய்து கொடுத்துள்ளனர். ஆனால் அதிக மக்கள் பயன்படுத்தும் நெல்லிவாசல் சாலையைஅதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது தான் ஏன் என்று தெரியவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.

இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என துறைசார்ந்த அதிகாரிகளுக்கு பல முறை மனு கொடுத்துள்ளனர்.  போராட்டம் நடத்தியுள்ளனர். தரமான சாலை கிடைப்பதற்கான விடிவுதான் இன்னும் இவர்களுக்கு கிட்டவில்லை.

Leave A Reply