கூடுவாஞ்சேரி, ஜூலை 31-

நந்திவரம்–கூடுவாஞ்சேரி, செங்குட்டுவன் தெருவில் வசித்து வருபவர் ஜம்புலிங்கம். இவரது மனைவிமீனாட்சி. கேளம்பாக்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் 3–வது மகள்திருமணத்துக்காக 30 பவுன் நகையை சேர்த்து பீரோவில் வைத்து இருந்தனர்.இந்த நிலையில் பக்கத்து தெருவில் உள்ள மற்றொரு மகள் வீட்டிற்கு, வீட்டை பூட்டி விட்டு மீனாட்சி சென்றார். திரும்பி வந்த போது வீட்டுக் கதவு பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 30 பவுன் நகையை காணவில்லை. மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.இது குறித்து கூடுவாஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave A Reply

%d bloggers like this: