தருமபுரி, ஜூலை  31 –

சிவாடி சிறுமியிடம் பாலியல் வன் முறையில் ஈடுபட்ட குற்றவாளி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்திந்திய ஜனநாயாக மாதர் சங்கம் சார்பில் தருமபுரி மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தருமபுரி வட்டம் சிவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவரின் மகன் கவின்குமார் (17). பதினோராம் வகுப்பு படித்துவந்தான். கடந்த மாதம் அதே கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதனால், அச்சிறுமிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது.

அதனை அடுத்து சிறுமியின்பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறினர். இதனையடுத்து, தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பிறகு, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கவின்குமாரை கைது செய்தனர். உடனடியாக ஜாமீனில் விடுவிடுத்தனர். அச்சிறுவனை சீர்திருத்த பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒன்றிய துணைத் தலைவர் ஆர்.வள்ளி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் என். அமிர்தம், மாவட்டத் தலைவர் ஆர்.மல்லிகா, கே.பூபதி, எஸ். மகேஸ்வரி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட நிர்வாகி கே.குப்புசாமி உட்பட பலர் பேசினர்.

Leave A Reply