கூடுவாஞ்சேரி, ஜூலை 31-

கீரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஏரி மற்றும் கல்குவாரிகளில் திருட்டுத் தனமாக மணல் அள்ளப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. பன்னீர் செல்வம், தாசில்தார் தனலட்சுமி ஆகியோர் தலைமையில் வருவாய்த் துறையினர் கீரப்பாக்கம் பகுதிக்கு விரைந்து சென்றனர்.

அவர்களை பார்த்ததும் மண் அள்ளிய மர்ம கும்பல் 2 பொக்லைன் எந்திரம் மற்றும் 2 ஒரு டிப்பர் லாரியை விட்டு தப்பி ஓடி விட்டனர். பொக்லைன் எந்திரம் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

Leave A Reply

%d bloggers like this: