சென்னை, ஜூலை 31-

முன்னணி பரத நாட்டிய கலைஞரான அனிதா குஹா வடிவமைத்த பரதாஞ்சலி மாணவர்களால் நிகழ்த்தப்படும் சுந்தர காண்டம் என்ற நாட்டிய நிகழ்ச்சி சென்னையில் நடைபெறவுள்ளது. பிரபல கர்நாடக இசையமைப்பாளர் நெய்வேலி  சந்தான கோபாலன் இசைக்கேற்ப நடைபெறும் இந்த  நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் சனிக்கிழமையன்று (ஆக.1) மாலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது.

சுந்தரகாண்டம் ஒரு நம்பிக்கையின் அடையாளம் என்பது காதல், வீரம், மனக்கிளர்ச்சி, இரக்கம், கருணை, பிரமிப்பு, நகைச்சுவை, மற்றும் பயங்கரம், ரசனை உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் ஒரு அழகிய துடிப்பு மிக்க நடனம் என்று அனிதா குஹா தெரிவித்துள்ளார். நன் கொடையாளர்கள் அனுமதி சீட்டு http://eventjini.com மற்றும் http://in.bookmyshow.com வலைத்தளங்களில் கிடைக்கும் என்று ஏய்ம் பர் சேவா அறக்கட்டளை கூறியுள்ளது.

Leave A Reply