சென்னை,ஜூலை 31-

கே.கே.நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் தனியார் தொலைக்காட்சியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.இவரிடம் போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் எலெக்ட்ரானிக் பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக கூறினார். இதை தொடர்ந்து ஜெயக்குமார் அவருடைய வங்கி கணக்குக்கு ரூ.40 ஆயிரம் ஆன்லைன் மூலம் செலுத்தினார். ஆனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் வரவில்லை.

இதுகுறித்து ஜெயக்குமார் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். விசாரணையில் நாகப்பட்டினத்தை சேர்ந்த வேதராஜ் என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

Leave A Reply