திருநெல்வேலி, ஜூலை 22-நெல்லையில் ஊதிய உயர்வுக்காக போராடி காவல்துறையால் தாக்கப்பட்டு உயிரிழந்த 17 பேரின் நினைவு தினமான வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாலை 4.30 மணிக்கு அஞ்சலி செலுத்துகிறது.நெல்லையில் கடந்த 1999ம் ஆண்டு மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வுக்காக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேஇதே ஜூலை 23ம் தேதிபோராட்டம் நடத்தினர்.அப்போது போராட்டத்தை ஒடுக்குவதற்காக ஊதிய உயர்வு கேட்டு போராடிய தொழிலாளர்களை காவல்துறை மிருகத்தனமாக தாக்கியது. இதில் 17பேர் உயிரிழந்தனர். அன்றைய தினம் தாமிரபரணி போர்க்களமாகக் காட்சியளித்தது. இது இந்த கோரத்தாண்டவத்தின் 16ம் ஆண்டாகும். வியாழனன்று தாமிரபரணி நதியில் பல்வேறுஅமைப்புக்கள், அரசியல்கட்சிகளும் மலர் தூவி அஞ்சலி செலுத்துகின்றன.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாலை 4.30 மணியளவில் தாமிரபரணி ஆற்றில்அஞ்சலி செலுத்துகிறது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீ.பழனி, முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.கிருஷ்ணன் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.கருணாநிதி, ஆர்.மோகன், பாளை தாலுகாசெயலாளர் ஸ்ரீராம், மாவட்டக் குழு உறுப்பினர் சுடலைராஜ் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டு ஆற்றில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.