உதகை, ஜூலை 21-
உதகையில், மாவட்ட நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கட்டுமான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.நல வாரியத்தில் பதிவு செய்த பின்பும் தொழிலாளர்கள் நேரில் வந்து மனு கொடுக்க வேண்டும் என வற்புறுத்தக்கூடாது. நலவாரியத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்காக ஆஜராக தொழிற்சங்கங்களுக்கு உரிமை வழங்க வேண்டும். பதிவு புதுப்பித்தல், கேட்பு மனுவுக்கு அனுமதி வழங்குவதில் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரி நடைமுறை பின்பற்ற வேண்டும். நலவாரியத்தை தன்னாட்சி அதிகாரம் கொண்ட முத்தரப்பு கமிட்டியாக மாற்றி அமைக்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகள் வலியுறுத்தி நீலகிரி மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் (ஏஐடியுசி) சார்பில் செவ்வாயன்று உதகையில் உள்ள மாவட்ட நல வாரிய அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.
இப்போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆரி தலைமை வகித்தார். ஏஐடியுசி மாவட்ட செயலாளர் போஜராஜ் துவக்கி வைத்தார். சிவக்குமார், உதயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.
கோவை
கோவை இராமநாதபுரத்தில் உள்ள அமைப்புச்சார தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தைஏஐடியுசி மாநில துணை செயலாளர் செல்வராஜ் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோரை காவர் துறை கைது செய்தனர்.
நாமக்கல்
இதேபோல், நாமக்கல் மாவட்ட நலவாரிய அலுவலகங்கள் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த முழங்கியபடி ஊர்வலமாக சென்ற கட்டிடத் தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.