எடப்பாடி, ஆக.17-எடப்பாடி அரசு ஆண்கள் மேல்லைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக நடைபெற்ற சிறப்பு முகாமில் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக நடைபெற்றன. இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சி.கே.தங்கமணி தலைமைவகித்தார். இதில் அனைத்து பிரிவு மாற்றுத்திறனாளிகளும் பயன்பபெறும் வகையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் இணைந்து தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
சிறப்பு அழைப்பாளராக நகர்மன்ற தலைவர் கதிரேசன் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு 30 மூன்று சக்கர சைக்கிள்கள், 35 சக்கர நாற்காளிகள், 50 காதோர் கருவிகள் ஆகியவை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ காப்பீடு அட்டைகளுக்கான நேர்காணல் இங்கு நடைபெற்றது. வங்கிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வங்கிகடன் வழங்கவும் மாற்றுத்திறனாளிகளால் கோரிக்கை மனுக்கள்கொடுக்கப்பட்டன. இந்த சிறப்பு முகாமில் முடநீக்கு வல்லுநர் சேகர், ஜான்சி மற்றும் ஏராளமானமாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.