இராமநாதபுரம், ஜூலை 30-கோவில் திருவிழா தொடர்பான வரவு-செலவு கணக்கை சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இராமநாதபுரம் புலிக்கார தெருவில் உள்ள கோவில் ஒன்றில் திருவிழா நடைபெற்றுள்ளது. திருவிழா தொடர்பான வரவு-செலவு கணக்கை சமர்ப்பிப்பதில் அப்பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி அங்குச்சாமிக்கும் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் மணிகண்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது மோதலாக மாறியது.சம்பவம் குறித்து கேணிக்கரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அங்குச்சாமி மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்த கண்ணன், விஜயராமகிருஷ்ணன், பெரியசாமி, பூமிநாதன், பாலு, பார்த்தி, மற்றும் மணிகண்டன் மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்த சுரேஷ்குமார், நம்புராஜன், பாலமுருகன், மணி, மணிகண்டன், ராமமூர்த்தி ஆகிய 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்

Leave a Reply

You must be logged in to post a comment.