தூத்துக்குடி, நவ. 19 –
தூத்துக்குடி டி.சவேரி யார்புரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. கூலித் தொழி லாளியான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவரது மனைவி அமுதா (36). வாய்பேச முடியாத இவர் மகன் ரவிக்குமாருடன் (9) தனியாக வசித்து வந்தார்.இந்நிலையில், அமுதா, அண்ணன் கருப்பசாமி யின் மகள் கனகவல்லி (13)யுடன் மாப்பிள்ளை யூரணி பகுதியில் உள்ள சுனாமி காலனி அருகே ஆடு மேய்த்துக் கொண் டிருந்தார்.அப்போது அங்கு வந்த 3 பேர் அமுதாவின் வாயை பொத்தி பலவந்த மாக தூக்கிச் சென்று மறைவான இடத்தில் வைத்து பாலியல் பலாத் காரம் செய்ய முயன்றனர்.
சிறுமி கனகவல்லி அளித்த தகவலின் பேரில், சிறப்பு எஸ்ஐ முருகன், தனிப்பிரிவு ஏட்டுகள் மகராஜன், முருகேசன் ஆகியோர் சம்பவ இடத் திற்கு வந்து, இருவரைக் கைது செய்தனர். ஒருவர் தப்பி ஓடி விட்டார். அமுதா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.பிடிபட்ட இருவரி டம் நடத்திய விசாரணை யில் அவர்கள் டேவிஸ் புரத்தை சேர்ந்த செல் வம்(36) மற்றும் சரவண வேல் முருகன்(27) என் பது தெரியவந்தது. இரு வரையும் போலீசார் கைது செய்தனர். இதில் செல்வத்திற்கு திருமண மாகி விட்டது. தப்பி ஓடிய டேவிஸ்புரத்தை சேர்ந்த சவுந்திரராஜன் மகன் லட்சுமணபெரு மாள் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.