திருவேங்கடம், நவ. 14-
கிராமியக் கூத்துக்கலையில் சுமார் 45 ஆண்டு காலம் தடம்பதித்து, இடது சாரி-முற்போக்கு கலை இலக்கிய மேடைகளில் இடைவிடாது இயங்கி வந்த மூத்த கலைஞர் பாவலர் ஓம் முத்துமாரி வியாழனன்று திருவேங்கடத்தில் காலமானார்.
அவருக்கு வயது 80. திருநெல்வேலி மாவட்டம் குருவி குளம் ஒன்றியம் திருவேங்கடத்தில் வசித்து வந்த தோழர் ஓம் முத்துமாரி, கடந்த சில காலமாக உடல்நலம் குன்றியிருந்தார். இந்நிலையில் நவம்பர் 14 வியாழனன்று மாலை 3 மணியளவில் மரணமடைந்தார். தோழர் ஓம் முத்துமாரிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். அவரது மனைவி முத்தம்மாள் ஏற்கெனவே மறைந்து விட்டார்.
சிபிஎம் இரங்கல் : தோழர் ஓம் முத்துமாரி மறை வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்து விடுத்துள்ள செய்தி வருமாறு:-
தோழர் பாவலர் ஓம் முத்துமாரி விருதுநகர் மாவட்டம் செவலூரில் பிறந்தவர். திருவேங்கடம் அருகே உள்ள வரகனூரில் இருந்து தனது கிராமிய கலை வாழ்க்கையை துவக்கியவர்.
தனது இளம் வயதி லிருந்தே கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளிலும் இடதுசாரி இயக்கங்களின் மேடைகளிலும் மக்கள் பிரச்சனை களை முன்வைத்து கூத்து வடிவத்தில் கிராமிய கலை நிகழ்வுகளை ஊர்தோறும் அரங்கேற்றியவர். தமிழகம் முழுவதும் பட்டிதொட்டி எங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகள், தமுஎகசவின் கலைஇலக்கிய மேடைகள் என இடை விடாமல் உழைக்கும் மக்கள் மீது பற்றுறுதியோடு அவர்களது வாழ்வின் துயரங்களை பாடல்களாக முழங்கியவர்.
மதுரையில் மார்க்சிய இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவ ரான தோழர் பி.ராமமூர்த்தி தேர் தலில் போட்டியிட்டபோது அவ ருக்கு ஆதரவாக வீதி வீதியாக கலைப் பிரச்சார நிகழ்ச்சிகளை நடத்தியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்த தோழர் ஓம் முத்துமாரி, தனது இறுதி மூச்சு வரை தமுஎகசவில் ஓர் உறுதிமிக்க அங்கமாக தன்னை இணைத்துக் கொண்டிருந்தவர். தமுஎகசவின் மாநிலக்குழுவிலும் திருநெல்வேலி மாவட்டக்குழுவிலும் உறுப்பினராக செயல்பட்டவர்.
தமிழக அரசால் கலை மாமணி விருது பெற்ற ஓம் முத்துமாரி, தமுஎகசவால் முற்போக்கு முன்னணிக்கலைஞர் என்று பட்டம் கொடுக் கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். பாவலர் என்று தோழர்களால் அன்போடு அழைக்கப்பட்ட ஓம் முத்துமாரி, நவரசக் கலைஞர், இசை நாடக நகைச்சுவைக் கலைஞர், கிராமியக் கலைச்சக்ரவர்த்தி, கலை முதுமணி, மரகதமணி என்பது உள் பட பல்வேறு விருதுகளை பல்வேறு அமைப்புகளால் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டவர்.
தோழர் முத்துமாரியின் மறைவு முற்போக்கு கிராமியக் கூத்துக்கலைக்கு பேரிழப்பு ஆகும். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த அஞ் சலியையும், அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு அனுதா பங்களையும் தெரிவித்துக் கொள் கிறோம்.இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமுஎகச அஞ்சலி : தோழர் ஓம் முத்துமாரி மறைவு கலை இலக்கிய உலகிற்கு பேரிழப்பு என்று தமுஎகச மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இன்று இறுதி நிகழ்ச்சி : தோழர் ஓம் முத்துமாரியின் இறுதி நிகழ்ச்சி திருவேங்கடத்தில் வெள்ளியன்று முற்பகல் 11 மணி யளவில் நடைபெறவுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: