பாஜக வேட்பாளர்கள் தேர்வில் தலையிட மாட்டோம் என்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் சுரேஷ் ஜோஷி கூறியுள்ள தை நகைச்சுவை என்று யாரும் கருதக்கூடாது. அவர் மேலும் ஒரு படி மேலே சென்று பிரதமர் வேட்பாளரையும் பாஜகதான் தேர்வு செய்தது. அதில் எங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாள ராக மோடியை முன்னிறுத்துவது என்ற முடிவை ஆர்எஸ்எஸ் எடுத்து வெகுகாலமாகிறது. குஜராத்தில் பெரும் முதலாளிகள் மற்றும் கார்ப் பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரி வழங்கிய, சிறுபான்மை இஸ்லாமிய மக்களை கொன்று குவித்த கடைந்தெடுத்த வலது சாரியான மோடிதான் நாட்டை மதவெறி பாதை யில் வழிநடத்த சரியான நபர் என்று ஆர்எஸ்எஸ் கருதியது.
ஆனால் இந்த முடிவை பாஜகவில் திணிப் பது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. பிரதமர் கனவில் மிதந்து கொண்டிருந்த அத் வானி, முரளி மனோகர் ஜோஷி, அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் என ஆளாளுக்கு முறுக்கிக் கொண்டார்கள். அவர்கள் அத்தனை பேரையும் உருட்டிமிரட்டி பணியவைத்தது ஆர்எஸ்எஸ் அமைப்புதான் என்பதை அனைவரும் அறிவர். அதிலும் கடைசி வரை அதிருப்தியை வெளிப் படுத்திக் கொண்டிருந்த, ராஜினாமா வரை சென்ற அத்வானியை ஆர்எஸ்எஸ் நேரடியாக அழைத்து மிரட்டி பணியவைத்தது.
தில்லி மாநில தேர்தலுக்கான பாஜக முதல்வர் வேட்பாளர் யார் என்பதிலும் அக்கட்சிக்குள் குடுமிபிடி சண்டை நடந்தது. கடைசியில் ஆர்எஸ்எஸ் தலையிட்டுத்தான் பிரச்சனை முடிந்தது என்பதும் அனைவரும் அறிந்ததே. பிரதமர் மற்றும் முதல்வர் வேட்பாளர்களை தேர்வு செய்த இவர்கள் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தடையிட மாட்டார்கள் என்பதை பள்ளிப்பிள்ளையும் நம் பாது. மேலும் ஆர்எஸ்எஸ் என்கிற அபாயகரமான சித்தாந்த அமைப்பின் அரசியல் பிரிவுதான் பாஜக என்பது உலகறிந்த ரகசியம்தான்.அரசியலுக்கும் தங்களுக்கும் சம்பந்த மில்லை என்பது போல காட்டிக்கொள்ளும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய செயற்குழு கூட்டத்தில் வகுப்புக்கலவர தடுப்பு மசோதா குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது என்றும் சுரேஷ் ஜோஷி கூறியுள்ளார். குஜராத் உட்பட பல்வேறு இடங்களில் ஆர்எஸ்எஸ் பரிவாரத் தினால் சிறுபான்மை மக்கள் குறிவைத்து தாக் கப்படுகின்றனர். அவர்களது உடைமைகள் நாசம் செய்யப்படுகின்றன. வகுப்புக் கலவரங் களால் பாதிக்கப்படும் மக்களுக்கு குறைந்த பட்ச நிவாரணம் தருவதற்காகவே வகுப்புக் கலவர தடுப்பு மசோதா கொண்டு வரப்பட்டது. அதுகூட இவர்களுக்கு பொறுக்கவில்லை.இந்த மசோதாவின்படி பாதிக்கப்படும் சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல, அனைத் துப்பகுதி மக்களுக்கும் நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஆனால் இது சிறுபான்மை மக்களை தாஜா செய்வதற்காக கொண்டுவரப் படுகிறது என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு கூறுவ தன் மூலம் இவர்கள்தான் கலவரங்களை திட்ட மிட்டு தூண்டி சிறுபான்மை மக்களை குறி வைக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. என்னதான் ஆர்எஸ்எஸ் தலைவர் பாஜக வுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று கூறினாலும் இரு அமைப்புகளுக்கும் இடை யில் உள்ள தொப்புள் கொடி உறவை மறைக்க முடியாது.

Leave a Reply

You must be logged in to post a comment.