அந்தியூர், அக். 20-அந்தியூர் தாலுகா அலுவலகம் முன்பு ஏற்கனவே கொடுத்த மனுக்களை மாலையாக அணிந்து சிஐடியு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகில் உள்ளவள்ளலார்புரம் ஏழைகட்டுமான தொழிலாளர்கள் பட்டா கேட்டு மனு கொடுத்தும் பட்டா கொடுக்க மறுத்ததால் ஏற்கனவே கொடுத்த மனுக்களை மாலையாக அணிந்து ஈரோடு மாவட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் சிஐடியு சார்பில் அந்தியூர்வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வள்ளலார்புரம் சி.டபிள்யு. எப்.ஐ. கிளை தலைவர் கே.சின்னச்சாமி தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் பி.லட்சுமணன்,துணைத் தலைவர் டி.மாதையன், பொருளாளர் எஸ்.சி.குருசாமி, கமிட்டி உறுப்பினர்கள் ஆர்.கண்ணம்மாள், எம் கண்ணம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க மாவட்டத் தலைவர் கே.துரைராஜ், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் ஜி. பழனிச்சாமி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்புமுன்னணி மாவட்டச் செயலாளர் பி.பி.பழனிச்சாமி கட்டுமான சங்க மாவட்டத் தலைவர் ஆர்.முருகேசன் சிபிஎம்அந்தியூர் தாலுகா செயலாளர் எஸ்.வி.மாரிமுத்து, விவசாயத் தொழிலாளர் சங்க அந்தியூர் தாலுகா செயலாளர் ஏ.கே.பழனிச்சாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.அப்போது வள்ளலார்புரம் ஏழை கட்டுமான தொழிலாளர்களுக்கு உடனே பட்டா வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தினார்கள்

Leave a Reply

You must be logged in to post a comment.