திருச்சி, ஜூலை 28 –
அரசுப் பள்ளிகளில் ஆங்கில மொழித் திணிப்பு நடவடிக்கையை அரசு முழுமையாக கைவிட வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் மாநில சிறப்பு மாநாடு வலியுறுத்தி யது.இந்திய மாணவர் சங் கத்தின் சார்பில் ‘தாய்மொழி யே பயிற்றுமொழி’ என்ற முழக்கத்துடன் மாநில அளவிலான சிறப்பு மாநாடு திருச்சியில் கடந்த செவ்வா யன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:கடந்த கல்வி ஆண்டில் 320 அரசுப்பள்ளிகளில் முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளில் தலா இரண்டு ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இவ் வாறு 640 பிரிவுகள் தொடங்கப்பட்டு அதில் 22, 400 மாணவர்கள் படித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து இந்த கல்வி யாண்டில் அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல் நிலைப்பள்ளிகள் என 3200 பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப் படும். இதன் மூலம் 1,50,000 மாணவ-மாணவியர் பயன் பெறுவர் என்ற அதிமுக வின் பள்ளிக்கல்வி அமைச் சர் கடந்த மே 10ந்தேதி தமிழக சட்டப்பேரவையில் அறிவித்தார்.அரசின் இந்த முடிவுக்கு இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனத்தை தெரி வித்தது.
ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்டு கல்வி பயின்றால் தான் அறிவு மேம்படும் என்ற அர சின் முடிவு அபத்தமானது; அறிவியல் நடைமுறைக்குப் புறம்பானது.மனிதனின் சிந்தனையும், படைப்பாற்றல் திறனும் தாய்மொழிக்கல்வி வழி தான் மேம்பாடு அடையும். உலக நாடுகள் பலவற்றிலும் தாய்மொழி வழியாகத்தான் கல்வி கற்பிக்கப்படுகின்றது.தனியார் மெட்ரிக் பள்ளி களைப் போல் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை அறிமுகப்படுத் தினால் அரசுப்பள்ளிகளில் தொடர்ந்து குறைந்து வரும் மாணவர்களின் எண் ணிக்கையை தடுக்க முடியும் என்று அரசு அறிவியல் பூர்வமற்ற கருத்தை முன் வைக்கிறது.பன்மொழி பேசும் மிகச் சிறந்த ஆளுமைகளையும் பல்துறை அறிஞர்களையும் உருவாக்கியது தாய்மொழி வழியில் கற்பித்த அரசுப் பள்ளிகளே.அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளான கழிவறை, குடிநீர், போது மான வகுப்பறை, ஆய்வகம், விளையாட்டு மைதானம் ஆசிரியர் காலிப்பணியிடங் கள் நிரப்புவது உள்ளிட்ட அடிப்படை தேவைகளை அரசுப்பள்ளிகளில் நிறை வேற்றும் போது தரமான பள்ளிக்கல்வியை அரசுப் பள்ளிகளில் உறுதிப்படுத்த முடியும். மாணவர்களின் எண்ணிக்கை குறைவதும் தடுக்கப்படும். செய்ய வேண்டியவற்றை விடுத்து அரசு முன்வைக்கும் வாதம் பொருத்தமற்றது.
இந்தியா விலுள்ள அனைத்து குழந் தைகளுக்கும் முழுமையான கல்வியை அருகமைப் பள்ளிகளை கொண்ட பொதுப்பள்ளிகளை பலப் படுத்துவதன் மூலமே சாத் தியம். ஆகவே அதற்கான முறையில் அரசுப் பயணிக்க வேண்டும்.அரசுப்பள்ளிகளில் ஆங் கில மொழி திணிப்பு நட வடிக்கை அரசு முழுமை யாக கைவிட வேண்டும். வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குக!இன்றும் 80சதவீதம் மாணவர்கள் தமிழ் வழியில் தான் படித்து வருகிறார்கள். அரசின் ஆங்கிலத் திணிப்பு நடவடிக்கை இவர்களை நம்பிக்கையில்லாதவர்களாக மாற்றியுள்ளது. இந்நிலை யில் தமிழக அரசு தாய் மொழியில் படித்தவர் களுக்கு அரசு வேலைவாய்ப் பில் முன்னுரிமை அளிக் கும்போது தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு நம்பிக்கையை உருவாக்க முடியும். ஆகவே, அரசு தமிழ்வழியில் படித்தவர் களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற கொள் கை முடிவை எடுக்க வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்துக50 ஆயிரத்திற்கும் மேற் பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆரம் பப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், இடைநிலை மற் றும் மேல்நிலைப்பள்ளி களில் அடிப்படை தேவை களான, சுகாதாரமான கழி வறைகள், சுத்தமான குடிநீர் வசதி, வகுப்பறைகள், ஆய் வகங்கள், விளையாட்டு மைதானம், தனித்திறனை வெளிப்படுத்துவதற்கான பயிற்சிகள் மற்றும் காலி யாக உள்ள ஆசிரியர் மற் றும் ஆசிரியல்லா பணியி டங்கள் நிரப்பிட வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் தரமான பள்ளிக் கல்வியை அரசு உறுதிப்படுத்திட வேண் டும். அதற்கான முறையில் கூடுதல் நிதி ஒதுக்கி அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டுமென இந்திய மாணவர் சங்கம் வலி யுறுத்துகிறது.இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இம்மாநாட்டில் சங்கத் தின் மாநிலத் தலைவர் கே. எஸ்.கனகராஜ், செயலாளர் ஜோ.ராஜ்மோகன், மத்தியக் குழு உறுப்பினர் கரிகாலன், மாநில துணைச் செயலா ளர் மாரியப்பன், திருச்சி மாவட்டத் தலைவர் சர வணத் தமிழன், செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.