சென்னை, ஜுன் 25 -நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் 5சதவீதப் பங்குகளை தனியாருக்கு விற்பதை எதிர்த்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். என்எல்சியின் 5சதவீத பங்குகளை மத்திய அரசு தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்களுக்கு விற்கலாம் என்று அவர் யோசனை கூறியுள்ளார். தனியாருக்கு விற்பதை ஏற்க முடியாது. இந்த முடிவை பிரதமர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் என்எல்சி நிறுவனப் பங்குகளை தனி யாருக்கு விற்கக்கூடாது என்று ஏற்கெனவே பிரதமருக்கு கடிதங்கள் எழுதியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். என்எல்சி தொழிலாளர் கள் மற்றும் தமிழக மக்க ளின்உணர்வுகளுக்கு மாறாக இந்த முடிவு எடுக்கப்பட் டுள்ளதாக குறிப்பிட்ட அவர், தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் பதற்றம் ஏற்படுவதோடு தமிழகத்தின் மின்விநியோக மும் பாதிக்கப்படும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.