சென்னை, டிச. 16 –
நெடுஞ்சாலைத்துறைக்கென தனியாக, இத்துறையின் அனைத்து தலைமைப் பொறியாளர் அலுவலகங்கள் உள்ளடக் கிய ஒருங்கிணந்த தலைமைப் பொறியா ளர் அலுவலகத்தினை ரூ. 13 கோடியே 21 லட்சத்து 28 ஆயிரத்து 400 செலவில் சென்னையில் கட்டுவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இந்த ஒருங்கிணைந்த அலுவலகம், சென்னை கிண்டியில் நெடுஞ்சாலைத் துறையின் தர உறுதி மற்றும் ஆராய்ச்சி அலுவலகம் தற்பொழுது இயங்கி வரும் வளாகத்திலேயே அமைக்கப்படும். இந்த அலுவலகம் 3 தளங்களை கொண்டதாக வும், 7,256 ச.மீ தரை பரப்பளவு கொண் டதாகவும் இருக்கும்.கோவை நகரில் போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து, அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற் படுகிறது. இப்போக்குவரத்து நெரிசலை தவிர்த்து, பொது மக்கள் பயன் பெறும் வண்ணம் தேசிய நெடுஞ்சாலையில் கண பதி, டெக்ஸ்டூல் தொழிற்சாலைக்கு அருகில் 20 கோடி ரூபாய் மதிப்பிட்டில் கூடுதல் இருவழி சாலை மேம்பாலம் அமைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். கும்பகோணம்-மன்னார்குடி-அதி ராமப்பட்டினம் சாலையில், மன்னார்குடி நகருக்குள் நுழையாமல் புறவழியாக செல்வதற்காக 23.48 கி.மீ. நீளமுள்ள வட்டச் சாலை ஏற்படுத்த 96.24 ஹெக்டேர் நிலங்களை, நில எடுப்பு செய்வதற்காக 10 கோடியே 6 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோன்று, திருச்சி மாவட்டத்தி லுள்ள மண்ணச்சநல்லூர் நகரில் 2.62 கி.மீ நீளமுள்ள இருவழிப் புறவழிச்சாலையை திருச்சி-துறையூர் சாலையில் அமைக்க 6.58 ஹெக்டேர் நிலங்களை நிலம் எடுப்பு செய்ய 14 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.திருத்தணி நகரில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றது. இதனை தவிர்க்க சட்ராஸ்- செங்கல்பட்டு-காஞ்சிபுரம்-அரக்கோணம்-திருத்தணி சாலையில், திருத்தணிக்கு அருகில் 10/4 கி.மீ. இடத்திலிருந்து 3.241 கி.மீ நீளமுள்ள புறவழிச்சாலை அமைப்பதற்காக 9.11.0 ஹெக்டேர் நிலம் நிலஎடுப்பு செய்வதற்கு 11 கோடியே 61 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். தூத்துக்குடி கொல்லம் சாலையில் 2 கிலோ மீட்டர் – 6 கிலோ மீட்டர் வரை உள்ள பகுதியை அகலப்படுத்தி, கடினப் புருவங்களுடன் கூடிய நடுத்தடுப்பு மற்றும் நடைமேடையுடன் 3 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இருவழிச் சாலையாக உள்ள மதுரை-தூத்துக்குடி சாலையை பலவழித்தடமாக அகலப்படுத்துத்துவதற்கும், அச்சாலையை மறுகட்டமைப்பதற்கும், 11 கோடியே 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.