முற்போக்குக் கலை இலக்கிய இயக் கத்தின் முக்கியக் கோட்பாடு – மக் களிடமிருந்து படிப்போம், மக்க ளுக்காகப் படைப்போம். முறி வில்லா அந்தப் பயணத்தில் சற்றே இளைப்பாறுகிற நிழல் தரும் நிகழ்வு தான் விருது வழங்கல். இளைப் பாறுகிறபோது கடந்துவந்த பாதை யைப் பற்றிய நினைவலைகள், முன்னேறிச் செல்ல வேண்டிய கனவலைகள் இரண்டுமே வருடிச் செல்லும். சென்னையில் கடல் அலைகள் வருடிச் செல்லும் இடத் தில், அத்தகைய ஒரு விருதுப் பயண நினைவலைகளும் கனவலைகளும் வந்துசென்றன. தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு சார்பில், 2011ம் ஆண்டிற்கான கலை இலக் கிய விருதுகள் வழங்கும் விழாதான் அது.
கப்பல் சிப்பந்திகள் நல மைய அரங்கில் ஜூன் 17 அன்று, சங்கத் தின் ‘தமிழகப் பண்பாட்டு மலர்’ வெளியீட்டு விழா, சிறந்த திரைப் படங்களுக்கான விருது விழா ஆகியவையும் இணைந்த முப் பெரும் விழாவாக நடைபெற்றது.புத்தகங்களுக்கான விருது வழங்கல், விழாவை நடத்திக் கொடுத்த தமுஎகச வட சென்னை மாவட்டச் செயலாளர் ஜேசுதாஸ் வரவேற்புடன் காலையில் தொடங் கியது. தலைமை தாங்கிய துணைத் தலைவர் மேலாண்மை பொன்னுச் சாமி, “விருதுகளால் சிறகு முளைப் பதில்லை, கொம்புகளும் முளைப் பதில்லை. ஆனால் புதிய வெளிச் சம் கிடைக்கிறது,” என்றார்.துணைத்தலைவர் ‘சிகரம்’ ச. செந்தில்நாதன், “போரில் கையாள் வதற்கு நேர்மாறான உத்திகள் கலை இலக்கியத்தில் தேவைப்படுகின் றன. தமிழ்ச் சமூகத்தில் பலமான பகுதிகளாக உள்ள சாதி, சமயம் முதலானவற்றைக் குறிவைத்துத் தாக்க வேண்டியுள்ளது,” என்று கூறி விழாவைத் தொடங்கிவைத்தார்.ஒடுக்கப்பட்ட மக்கள் படைப் பிற்கான அமரர் சு. சமுத்திரம் நினைவு விருது ‘சிவபாலனின் இடப்பெயர்ச்சிக் குறிப்புகள்’ எழுதிய அழகிய பெரியவன், நாவ லுக்கான கே.பி. பாலச்சந்தர் நினைவு விருது ‘கசகரனம்’ எழுதிய விமல் குழந்தை வேலு (அவர் சார் பாக தேவி பாரதி), சிறுகதை நூலுக் கான புதுமைப்பித்தன் நினைவு விருது ‘தேய்பிறை இரவுகளின் கதைகள்’ எழுதிய கீரனூர் ஜாகிர் ராஜா ஆகியோருக்கு வழங்கப்பட் டன. இந்தப் புத்தகங்கள் தேர்வு செய்யப்பட்டது ஏன் என செயற் குழு உறுப்பினர் மயிலை பாலு அளித்த உரை வாசிக்கப்பட்டது.
துணைப்பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா உரையாற்றினார்.துணைத்தலைவர் ஆர். நீலா தலைமையில் பிற்பகலில் இரண் டாம் அமர்வு. தமிழ் வளர்ச்சி குறித்த சிறந்த நூலுக்கான குன்றக் குடி அடிகளார் நினைவு விருது ‘ஆதி இசையின் அதிர்வுகள்’ ஆய்வை மேற்கொண்ட நா. மம் மது, மொழிபெயர்ப்புக்கான வ.சு.ப. மாணிக்கனார் நினைவு விருது ‘ஃபிடல்-சே புரட்சிகரமான நட்பு’ நூலுக்காக ச. சுப்பாராவ், கவிதை நூலுக்கான செல்வன் கார்க்கி நினைவு விருது ‘உம்மா கருவண் டாய் பறந்துபோகிறாள்’ படைத் தளித்த ஹெச்.ஜி. ரசூல் ஆகியோ ருக்கு வழங்கப்பட்டன. வடசென்னை மாவட்டத் தலைவர் சு. கிரு பானந்தசாமி இந்த மூன்று நூல்கள் குறித்துப் பேசினார்.தொடர்ந்து, குறும்பட-ஆவணப் படத்திற்கான பா. ராமச்சந்திரன் நினைவு விருதுகள், ‘எனக்கு இல் லையா கல்வி’ என்ற ஆவணப் படத்தை இயக்கிய பாரதி கிருஷ்ண குமார், ‘சித்ரா’ குறும்படத்தை இயக்கிய விக்னேஷ்வரன் விஜயன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
இந்த இரு தயாரிப்புகளும் தேர்வு செய்யப்பட்டது குறித்து விளக் கினார் துணைப்பொதுச் செயலா ளர் எஸ். கருணா. துறைமுக ஊழிய ராகவே பணியாற்றி, கதைகள், கவிதைகள் படைத்து, கல்வி நிலை தொடர்பான ஆவணப்படத்தை உருவாக்கி அது மக்களிடம் சென்ற டைவதைப் பார்க்காமலே மறைந்த பா. ராமச்சந்திரன் நினைவான விருது கப்பல் தொழிலாளர்களுக் கான அரங்கில் வழங்கப்படுகிற பொருத்தத்தை தொகுப்பாளர் நா.வே. அருள் நெகிழ்வோடு குறிப் பிட்டார். தனலட்சுமி ஒருங் கிணைக்க, தலைவர் ச. தமிழ்ச் செல்வன், பொதுச் செயலாளர் சு. வெங்கடேசன், பொருளாளர் சு. ராமச்சந்திரன் ஆகியோர் விருது களையும் சான்றிதழ்களையும் காசோலைகளையும் வழங்கினர். மக்களிடம் நிதி திரட்டியதன் மூலம் நடைபெறும் இந்த விழா வில் பங்கேற்று விருது பெறுவதன் பெருமித உணர்வைப் படைப் பாளிகள் வெளிப்படுத்தினர்.மாலையில், அதே வளாகத்தில் புற்களின் பசுமை சூழ்ந்துள்ள திறந்தவெளி அரங்கில், பண்பாட்டு மலர் வெளியிடப்பட்டது. துணைப் பொதுச் செயலாளர் இரா.தெ. முத்து வரவேற்புரையாற்ற, திரைப் பட நடிகர் விக்ரமின் மேலாளர் கிரி முன்னிலை வகிக்க, மலரை வெளி யிட்டார் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பொறுப்பு அலு வலர் முனைவர் க. இராமசாமி. மலரின் படிகளை சு. ராமச்சந்திரன், துணைச்செயலாளர் ஆர். ஈஸ்வரன், செயற்குழு உறுப்பினர் கி. அன்பர சன், கோவை மாவட்டச் செயலா ளர் தி. மணி பெற்றுக்கொண்டனர்.
“பண்பாட்டுப் பெருமை மிக்க தமிழகத்தில் இன்று ஒழுக்க நெறி களின் நிலை சோர்வைத் தருகிறது. எங்கும் பெருகியுள்ள லஞ்சம், ஊழல் ஆகியவையும் பண்பாட் டுச் சீரழிவின் கூறுகள்தான். பண் பாட்டுப் பெருமையை மீட்கவும், முற்போக்குப் பண்பாட்டை வளர்க் கவும் இந்த மண்ணில் ஒரு பண் பாட்டுப் புரட்சி நடக்க வேண்டும்” என்ற தமது அவாவை வெளிப் படுத்தினார் முனைவர்.வாழ்த்திப் பேசிய ‘புதிய தலை முறை’ ஆசிரியர் மாலன், திரைப் படத்தைக் கலை என்று சொல்ல முடியுமா என்ற கேள்வியை முன் வைத்தார். பல கலைகளை ஒருங்கி ணைத்த ஒரு ஊடகம்தானே அது என்று குறிப்பிட்ட அவர், அதே வேளையில் ஊடகச் செயல்பாட்டை தாம் குறைவாகக் கருதிவிட வில்லை என்றும் விளக்கி, சக ஊட கக்காரராக திரைக்கலைஞர்களுக் குத் தமது வாழ்த்தையும் தெரி வித்தார். “இந்திய வைதீக மரபு, மேலைய சிந்தனை மரபு ஆகிய வற்றைத் தொடர்ந்து இன்று தமிழ் மண்ணின் அடையாளங்களோடு சிந்திக்கிற மூன்றாம் மரபும் வளர்ந்து வருகிறது. அதை அடையாளங் கண்டு வளர்க்கிற பொறுப்பு முற் போக்குக் கலை-இலக்கிய இயக்கத் திற்கு இருக்கிறது,” என்றார் அவர்.கோடிக்கணக்கான மக்களை ஈர்க்கிற, அவர்களது பண்பாட்டு வாழ்வில் தாக்கம் செலுத்துகிற ஊடகமாகவும் கலையாகவும் திரைப்படம் இருக்கிறது என்றார் ச. தமிழ்ச்செல்வன். இது போன்ற சில புதிய சிந்தனைகள் விழாவில் வெளிப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், அவற்றைப் பற்றியெல்லாம் விவாதிக்கிற திறந்த மனதோடு சங் கம் இருப்பதையும் தெரிவித்தார்.நாட்டுப்புறக் கலைஞருக்கான அமரர் மூ.சி. கருப்பையா பாரதி – ஆனந்த சரஸ்வதி ‘நாட்டுப்புற கலைச்சுடர்’ விருது பாப்பம்பாடி ஜமா குழுவின் மூத்த கலைஞர் முனு சாமிக்கு வழங்கப்பட்டது.
அவரது ஆட்டச்சிறப்பை அவைக்குக் கூறி னார் கருணா.‘அழகர் சாமியின் குதிரை’ திரைப்படத்திற்காக தயாரிப்பாளர் மதன், இயக்குநர் சுசீந்திரன், கதையை எழுதிய பாஸ்கர் சக்தி, ‘வாகை சூட வா’ படத்திற்காக தயாரிப்பாளர் எஸ். முருகானந்தம், இயக்குநர் ஏ. சற்குணம் ஆகியோர் விருது பெற்றனர். புதிய முயற்சிக் கான ஊக்கப்பரிசுகளை ‘வெங்கா யம்’ படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாரின் தந்தையும் தெருக்கூத்துக் கலைஞரு மான சண்முகம், ‘நர்த்தகி’ படத் தின் இயக்குநர் விஜயபத்மா ஆகி யோர் பெற்றனர். முன்னதாக எந்தச் சிறப்புகளின் அடிப்படையில் இந் தப் படங்கள் தேர்வு செய்யப்பட் டன என்பது குறித்து நடுவர் குழு சார்பில் துணைச்செயலாளர் அ. குமரேசன் அறிக்கையளித்தார்.நிறைவுரையாற்றிய சு. வெங்க டேசன், “மக்களுக்கான கலை இலக் கியத்தில் ஈடுபடுவது, வளர்ப்பது என்பதில் முக்கியமானது நல்ல படைப்புகளைக் கண்டறிவதும், கொண்டாடுவதும். கவிதையில் தொடங்கி இன்று பல்வேறு துறை களிலும் விருதுகளை வழங்குவது அப்படிக் கொண்டாடுவதன் வளர்ச்சிதான்,” என்றார்.
“தமுஎகச-வின் திரை இயக்கம் இத்தகைய நல்ல படங்களை மக்க ளிடம் கொண்டு சேர்க்கிற பணியை யும் நிறைவேற்றும். அதே போல், விருதுபெற்ற நூல்கள் குறித்து கிளைகளில் விவாதிக்கிற நிலை வரவேண்டும். ஒவ்வொரு புத்தக மும் தமுஎகச மூலம் குறைந்தது 500 படிகள் வாங்கப்பட்டன என்ற நிலையும் வரவேண்டும்” என்ற விருப்பத்தையும் அவர் வேண்டு கோளாக விடுத்தார்.தொடக்கத்தில் புதுயுகம் இசைக் குழுவின் பாடல்கள் கடலோரக் காற்றாக இதமளிக்க, வடசென்னை மாவட்டத் தலைவர் மணிநாத் நன்றி கூற விழா நிறைவடைந்தது. கண்டறிந்து கொண்டாடிய படைப்பு களைத் துய்க்கிற, அடுத்தடுத்த மக் கள் படைப்புகளைக் கண்டறிந்து கொண்டாடுகிற உணர்வுகள் அலை யடித்துக்கொண்டிருக்கின்றன.

Leave a Reply

You must be logged in to post a comment.