டெல் அவிவ், ஜூன் 24-
காஸா – இஸ்ரேல் எல் லையில் உறுதி அளிக்கப் பட்ட சண்டை நிறுத்தத் தையும் மீறி நடந்த வன் முறைகளில் 6 வயதுச் சிறுவன் உள்ளிட்ட மூன்று பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டனர். ஸ்டெ ரோட் நகரில் ஒரு இஸ்ரே லியர் காயம் அடைந்தார்.காஸா நகரில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக் கிளை இஸ்ரேல் விமா னங்கள் தாக்கின. மோட் டார் சைக் கிள் பயணி தப்பி விட்டார். ஆனால் குண்டு கள் வெடித்த தில் ஒரு கட்டி டம் சிதறியது.
தெறித்துச் சிதறிய செங்கற்கள் தாக்கிய தில் 42 வயதான ஓசாமா அலி பலியானார். இஸ்ரேல் விமானங்க ளின் குண்டுகளுக்கு கால் பந்து மைதானம் ஒன்றும் இலக்கானது. கான் யூனிஸ் நகரில் மைதானத்துக்கு வெளியே தந்தையுடன் அமர்ந்திருந்த ஆறு வய துச்சிறுவன் அலி அல்-ஷாவஃப் இஸ்ரேல் குண் டுக்கு பலியானான். தனிப் பட்ட இஸ்ரேல் விமானத் தாக்குதலில் பாப்புலர் ரெசிஸ்டன்ஸ் குழுவைச் சேர்ந்த காலித் அல்-பூரி என் பவர் கொல்லப்பட்டதாக பாலஸ் தீனிய அதிகாரிகள் கூறினர்.
காஸா பகுதியில் இருந்து பயங்கரவாத நடவடிக்கை கள் அதிகரித்து வருவதா கக்கூறி, இஸ்ரேல் காஸாவுக் குள் விமானத்தாக்குதலை நடத்துவதாக ஹமாஸ் கூறு கிறது இஸ் ரேல் போர் விமா னங்கள் குறிப்பிடப்பட்ட இலக்குகளையும் நபர்க ளையும் விமானங்கள் மூலம் தாக்கிவருகின்றன. இஸ்ரே லின் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஹமாஸின் ஆயுதப் படைப்பிரிவான காஸம் பிரிகேட்ஸ் கூறியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.