பனாஜி, ஜூன் 24-
கோவா மாநிலத்தில் இறைச்சி கூடங்களை கட் டுப்படுத்த விலங்குகள் சித் ரவதை தடுப்புச் சட்டத்தில் சோதனை நடத்த ஒரு குழு வை கோவா அரசு நியமித் துள்ளது.கோவா இறைச்சி வளாக கூடம் மட்டும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றா கும். இதர இடங்களில் விலங்குகளை, தவறான முறை யில் கொடூரப்படுத்தக் கூடாது என அரசு இந்நடவடிக்கை எடுத்துள்ளது.கோவா இறைச்சி கூட வளாகத்தில் தகுதிவாய்ந்த திறன் பெற்ற ஊழியர்கள், நவீன கருவிகள் உள்ளன.
மேலும் அங்கு இறைச்சி சுத்தமான முறையில் அறி வியல் ரீதியிலான நடை முறைகள் கடைப்பிடிக்கப் படுகின்றன.கோவா மாநிலத்தில், அங்கீகாரம் இல்லாமல் 20-30 இடங்களில் விலங்குகளை அறுக்கப்பட்டு இறைச்சிக ளாக விற்கப்படுகின்றன. விலங்குகள், ஆரோக்கியம் சோதனை செய்யப்பட்ட பின்னரே கோவா, இறைச்சி கூட வளாகத்தில் அறுக்கப் படுகின்றன.ஆனால், சட்டவிரோத மாக விலங்குகள் அறுக்கப் படும் இடங்களில் நோய் பாதித்த விலங்குகள் அறுக் கப்படுவதாக அரசின் கவ னத்திற்கு வந்துள்ளது. நோய் பாதித்த விலங்குகளின் இறைச்சியை மனிதர்கள் சாப்பிடும்போது 400 வித விலங்கு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.இதனை தடுக்கவே சட் டவிரோதமாக செயல்படும் இறைச்சிக் கூடங்களின் மீது நடவடிக்கை எடுக்க, ஆய்வுக்குழு அமைக்கப்பட் டுள்ளது.
கோவா மாநில எல் லைப் பகுதிகளில் இருந்து, சட்டவிரோத இறைச்சிகள் வருவதை, சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்துக்கள் தடுக்கும் பொறுப்பு உள்ளது என மாநில கால்நடை மற்றும் கால்நடை அறிவியல் துறை இயக்குநர் பலிரோ கூறி னார்.

Leave a Reply

You must be logged in to post a comment.