அரவிந்தன் என்பது இயற் பெயர். இருந்தாலும் அழகிய பெரியவன் என்றே இலக்கிய உலகில் நிலைத் திருக்கிறார். தலித் இலக்கியத்திற் குப் புதிய திறப்பினைத் தந்தவர். ஒடுக்கப்பட்ட – ஒதுக்கப்பட்ட தலித் மக்களின் வாழ்க்கைப் பாடுகள் பற் றிய கவிதைகள், சிறுகதைகள், நாவல் கள், கட்டுரைகள் என அனைத்து வகைப்படைப்புகளிலும் பதிவு செய் வதை லட்சியமாகக் கொண்டவர்.
இவரது நேர்காணலின் சில பகுதி கள் இங்கே தரப்படுகின்றன.இலக்கியத்தின் பால் தாங்கள் ஈர்க்கப்பட்டக் காரணம் என்ன?என் குடும்ப மரபும், எனக்கு அமைந்த சூழலும் தான் என்னை இலக்கியத்தில் ஆர்வம் கொள்ளச் செய்திருக்கும் என்று நினைக் கிறேன். என் இரண்டு தாத்தாக்களில் ஒருவர் பாடகர் என்றும், ஒருவர் கூத்துக்காரர் என்றும் பெய ரெடுத்தவர்கள். அப்பாவைப் பெற்ற தாத்தா நிறைய கூத்து பற்றிய நூல்களை வைத்து படித்துக் கொண்டிருப்பார். அவரை எல்லோரும் ‘வாத்தியார்’ என்றுதான் அழைப்பார்கள். கூத்து நாடகங்களையும், வீர விளையாட்டுகளையும் கற்றுத் தருகின்ற ஒரு வரைத் தான் எங்கள் ஊரில் அப்படி அழைப்பார்கள். இன்னொரு தாத்தா தனிப்பாடல்களையும், சித்தர் பாடல்களையும், சிற்றிலக்கியப் பாடல்களையும் பாடுவதில் வல்லவர். ஆதிக்க சாதிக்கார வாத்தியார் ஒருவரிடம் போட்டியிட்டு பாடி வென்ற தோடு, ஐந்து ரூபாயை பரிசாகப் பெற்றிருக்கிறார். இது என் மரபு எனில் நான் வளர்ந்த சூழலும் கூட, புத்தகங்கள், இலக்கியம் என்றே அமைந்துவிட்டது.பாட்டி, வீட்டில் ஒரு மாமாவின் சேகரிப்பில் நிறைய புத்தகங்கள் இருந்தன.
அவர் அறுபதுகளின் இடைப்பகுதியில் சென்னை பச்சையப்பன் கல்லூரி யில் எம்.ஏ தத்துவம் படித்தார். மரபுக்கவிதைகளை யும், சிறு கதைகளையும், கிறித்துவப் பாடல்களையும் அவர் எழுதியிருக்கிறார். அவருடைய நூல்களைப் பராமரிப்பது என் விருப்பமான வேலையாகும். அப் போது நூல்களைப் படிப்பது, பயன்படுத்துவது என்ற பழக்கம் உருவானது.ஆம்பூர் தேவலாபுரம் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக் கும் போதிருந்தே ‘காமிக்ஸ்’ படிக்கின்ற ஆர்வம் இருந்தது. வீர தீர சாகசக் கதைகளையும், மந்திரங் களையும் அப்போது வெறியுடன் படித்தேன். ஏசு தாஸ் என்கிற நண்பன்தான் அப்போது அதுபோன்ற புத்தகங்களை நிறைய வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பான். பள்ளியிலே பாடம் நடக்காத நேரங் கள், விளையாட அனுமதிக்கிற நேரங்கள் எல்லா வற்றிலும் இந்தக் கதைகளைப் படிப்பதுதான் ஒரே வேலை. தாழ்வுணர்ச்சியும், கூச்சமும் நிரம்பி யிருந்ததால், விளையாட்டுகள் மீது ஆர்வம் போன தில்லை. பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருந்த சுப்பிர மணி அய்யா, விடுமுறைக் காலங்களில் எந்த நூல் களைப் படித்தீர்கள் என்று கேட்பார். அவருக்கும் பதில் சொல்லிப் பாராட்டுப் பெற வேண்டும் என்பதற் காகப் படிப்பேன். இப்படிதான் வாசிப்பில் ஆர்வம் உண் டானது. சிறு வயதிலேயே கதைகளை எழுதிப் பார்க்க வேண்டுமென நினைப்பேன். எழுத் தாளனாக வேண்டும் என்ற ஆசை எனக்கு அப்போதே இருந்தது.தங்களுடை ‘தகப்பன் கொடி’ நாவலைப் பற்றி சொல்லுங்கள்…‘தகப்பன் கொடி’ தலித்துகளின் நிலம் சார்ந்த வேட்கைகளை முன் வைத்து எழுதப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில் இந்நாவலை நான் எழுதி முடித்தேன். என் மூதாதையர்களின் கதை, நாவலில் விவரிக்கப்பட்டுள் ளது. நாவலின் முக்கியப் பாத்திரமாக வரும் அம்மாசி, என் தாத்தா சின்னப் பனின் அடையாளங்களை ஐம்பது விழுக்காடு கொண்டவர். நாவலில் விவ ரிக்கப்படும் பல்வேறு சம்பவங் களும் உண்மையானவையே.தலித் மக்களுக்கென்று வெள்ளையர்களால் வழங் கப்பட்ட பஞ்சமி நிலங்கள், இன்று அம்மக்களிடம் இல்லை. தலித்துகள் இம்மண்ணின் தொல்குடிகள். அவர்கள் இந்நிலத்தின் தொன்ம உரிமையாளர்கள். அவர்களை நிலமற்றவர்களாகவும், எப்போதும் கூலிக் காக கையேந்தும் சாதி இந்துக்களாகவும், அவர் களால் ஏற்படுத்தப்படும் அரசுகள் இதில் அக்கறை செலுத்துவதில்லை.
இத்துரோகத்தின் கதையை என் வட்டார அளவிலான கதைப்பரப்பினைக் கொண்டு பதிவு செய்வதே இந்நாவல்.கேரளம், மேற்கு வங்கம் போல (அங்கும் முழுமை யான நிலப்பகிர்வு நடந்ததா என தெரியவில்லை.) இந்தியாவின் பிற மாநிலங்களில் தலித்துகளுக்கு நிலங்கள் பகிர்ந்தளிக்கப்படவில்லை. சில முயற்சி கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிலத்துக்கானப் போராட்டங்களுடன் இணைத்து, எப்போதும் தலித்து கள் முன்னெடுத்தபடியேதான் இருக்கின்றனர்.இன்றைய தமிழ் தலித் இலக்கியத்தின் போக்கு எப்படி இருக்கிறது?தற்கால தமிழ் இலக்கியம் ஒரு வலுவான இலக் கியப் பிரிவாய் உருவாகி இருக்கிறது. சமகால தலித் எழுத்தாளர்கள் பலரும் – இன்று மிக முக்கிய தமிழ் எழுத் தாளர்களாய் அடையாளம் காணப்படுகின்றனர். இலக்கியம் மட்டுமின்றி விமர்சனம் , வரலாறு என்று பன்முகப்பட்ட துறைகளில், தலித் அறிவுஜீவிகளின் பங்களிப்பு இன்று முக்கியமானதாக இருக்கிறது.பாமா, சிவகாமி, ராஜ்கவுதமன், ரவிக்குமார், இமை யம், விழி, பா. இதயவேந்தன், என்.டி. ராஜ்குமார் போன்ற வர்களின் படைப்புகள், தமிழ் இலக்கியத்தைச் செழு மைப்படுத்தியுள்ளன. இப்பட்டியலில் சுதாகர் கத்தக், ஜே.பி. சாணக்யா போன்றோர் இன்று சேர்ந்துள்ளனர். இவர்கள் இருவருமே தமது சிறுகதைகளுக்காக ‘கதா’ விருது பெற்றவர்கள். தலித் சுயசரிதையே இல்லா திருந்த நிலையில், கே. ஏ. குணசேகரனின் ‘வடு’ சுய சரிதை வெளியாகி கவனிப்பைப் பெற்றுள்ளது. ‘வடு’ தமிழில் வெகு சமீபத்தில் வெளிவந்த ஒரு முக்கிய மான தலித் பிரதியாகும். 1990 -க்குப் பிறகே தீவிரம் கொள்ளத் தொடங்கிய தமிழ் தலித் இலக்கியம், இந்தப் பதினைந்து ஆண்டுகளில் உண்டாக்கிய அதிர்வலை கள் அதிகம்.
சமீபஆண்டுகளில், நாவலிலும், கவிதை யிலும், அது தேக்கம் கண்டுள்ளது. வரலாற்றுப் பின் புலத் துடன் அரசியல் மற்றும் மத கட்டமைப்புகளைத் தோலு ரிப்பதுபோல், தெளிவான போராட்டக் குணத்துடன் படைப்புகள் எதுவும் புதிதாக வரவில்லை.

Leave a Reply

You must be logged in to post a comment.