கோவை, ஜூன் 16-பப்பாளி மற்றும் தக்காளி கொண்டு உணவுப் பொருட்கள் தயாரிப்பு பற்றிய பயிற்சி கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் சேர்ந்து பயனடையலாம். மேலும் இப்பயிற்சி குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் பேராசியர் முனைவர் ரவி குமார் தியோடர் தெரிவித்துள்ளதாவது:தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தில் பப்பாளி மற்றும் தக்களி கொண்டு உணவு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி ஜூன் 18 மற்றும் 19 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இப்பயிற்சியில் கலவை பழரச பானங்கள், ஜாம் மற்றும் ஜெல்லி, சட்னி, சாஸ், ஊறுகனி (கேண்டி), ச்சீஸ் மற்றும் சூப் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. மேலும், பொருட்கள் விற்பனை செய்தல், தொழில் துவங்க கடன் வசதி பெறும் முறைகள், தொழில் தொடங்குவதற்கான உரிமம் பெறுவதற்கான வழிமுறைகள் போன்ற தொழில் சம்பந்தப்பட்ட தகவல்கள் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் ரூபாய் ஆயிரம் மட்டும் செலுத்தி தங்கள் பெயரை முன்பதிவு செய்துகொள்ளலாம். நேரில் வந்து பெயரைப் பதிவு செய்துகொள்ள இயலாதவர்கள் பயிற்சி கட்டணத் தொகையை வரைவோலை மூலம் முதன்மையர் வேளாண்மை பொறியியல் கல்லூரி என்ற பெயரில் கோவையிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் மாற்றத்தக்க வகையில் எடுத்து பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-3 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். பதிவு செய்ய கடைசி நாள் ஜூன் 18-ம் தேதி ஆகும். மேலும் இது குறித்த தகவல்கள் பெற 0422-6611340, 6611268 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.