சென்னை, ஜூன் 10 –
சென்னை பல்கலைக் கழக தேர்வுகளின் விடைத் தாள்கள் திருத்து தலிலும், மார்க் பதிவு செய்ததிலும் முறைகேடு செய்ததாக பல் கலைக்கழக அதிகாரிகள் 30 பேர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப் பப்பட்டுள்ளது.சென்னை பல்கலைக் கழகத்தில் முன்பு பி.இ., பி.டெக். படிப்பு இருந்தது. அண்ணாபல்கலைக்கழகம் வந்தபின்பு அந்த படிப்பு சென்னை பல்கலைக்கழகத் தில் இல்லை. ஆனால் முன்பு படித்து பெயிலானவர்கள் அந்த தேர்வை சென்னை பல்கலைக்கழகத்தில் எழுதி வந்தனர்.அந்த மாணவர்கள் 2011 மே மாதம் தேர்வு எழுதி னார்கள். அதுபோல கடந்த மே மாதம் சென்னை பல் கலைக்கழகம் தொலை தூரக்கல்வி நிறுவனமும் தேர்வுகளை நடத்தியது.இந்த தேர்வுகள் முடிந்த பின்னர் 7 விடைத்தாள் திருத்திய மையங்களில் மதிப் பெண்களை பதிவு செய்த போது அவற்றை திருத்தி முறைகேடு செய்யப்பட் டது. அதற்காக மதிப் பெண்களை மாற்றி ஆவ ணங்கள் தயாரிக்கப்பட் டன. இதுகுறித்து ஆட்சி மன்ற குழுவின் முடிவுபடி இந்த முறைகேடு பற்றி விசாரிக்க 4 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையின் அடிப் படையில் சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுக்கப் பட்டது.அதாவது விடைத்தாள் திருத்திய 7 மையங்களிலும் கண்காணிப்பாளர்களாக பணிபுரிந்த 7 பேர்களுக்கு 17(பி) சட்டப்படி தண்டனை வழங்கவும், தனி அதிகாரி கள் மற்றும் உதவி தனி அதி காரிகள் 32 பேர் மீது 17(ஏ) சட்டப்படி தண்டனை வழங்குவது தொடர்பாக வும் 2011 ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சிண்டி கேட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.இந்த நிலையில் முன் னாள் டி.ஜி.பி.ராதாகிருஷ் ணன், உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி அறிக்கை தந்தது. அந்த அறிக்கை கடந்த 29 ந் தேதி நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் தாக்கல் செய் யப்பட்டது. இதைத் தொடர்ந்து பல்கலைக் கழக ஊழியர்கள் 30 பேர் கள்மீது குற்றம் சாட்டப் பட்டு அவர்களிடம் விளக் கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அவர்கள் விளக்கம் தந்த பிறகு அந்த விளக்கத்தை முன்னாள் ஐ.ஏ.எஸ். அதி காரியும், முன்னாள் துணை வேந்தருமான ஆளுடைய பிள்ளை தலைமையிலான ஆணையம் விசாரிக்க உள் ளது. அந்த ஆணையம் அறிக்கை தந்த பின்னர் தான் அதை சிண்டிகேட் கூட்டத் தில் வைத்து இறுதி முடிவு செய்யப்பட உள்ளது.இது குறித்து சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் பி. திருவாசகம் கூறியதாவது: 4 பேர் கொண்ட கமிட்டி தந்த அறிக்கையின் பேரில் பல்கலைக்கழக ஊழியர் கள் 30 பேர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு அதற்கு அவர்களின் விளக்கத்தை கேட்டு நோட்டீஸ் அனுப் பப்பட்டுள்ளது. பதிவாளர் பொறுப்புக்கு பேராசிரியர் கோடீஸ்வர பிரசாத் நியமிக் கப்பட்டு பதவி ஏற்றுள் ளார்.எம்.எல். (சட்டப்படிப்பு), பி.இ. படிப்புகள் இப்போது சென்னை பல்கலைக்கழகத் தில் இல்லை. ஆனால் பெயி லானவர்கள் தேர்வு எழுதி னார்கள். இனிமேல் அவர் கள் சென்னை பல்கலைக் கழகத்தில் தேர்வு எழுத முடியாது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இனி மேல் அவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தை நாடி தேர்வு எழுதிக்கொள்ளலாம்.இவ்வாறு துணைவேந் தர் திருவாசகம் தெரிவித் தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.