சென்னை, ஜூன் 10 –
மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக பணிபுரி வோருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் அரசு விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளி யிட்ட அறிவிப்பில், மாற்றுத் திறனாளிகள் நலனுக் காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிபவர்கள் மற் றும் நிறுவனங்கள் தேர்வுக் குழு மூலம் தேர்வு செய் யப்படுகின்றன. சுதந்திர தின விழாவின்போது இந்த விருதிகளை முதல்வர் அளிப்பார். மாற்றுத் திறனாளி களுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்துக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ், மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த தொண்டு நிறுவனத்துக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழுடன் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு. மாற்றுத் திறனாளிக ளுக்கு சேவை புரிந்த சிறப்பு சமூகப் பணியாளர், மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவருக்கு தலா 10 கிராம் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ், மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக பணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சியருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசு, சிறந்த மாவட்ட மத்திய கூட் டுறவு வங்கிக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். விண்ணப்பிப்பது எங்கு? விருதுகளைப் பெற சென்னையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.மாற்றுத் திறனாளிகள் நல ஆணையாளர், நேரு உள்வட்டச் சாலை, கே.கே.நகர், சென்னை-78 என்ற முகவரியில் விண்ணப்பங்களைப் பெற்று சான்றுக ளுடன் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம் பரிந் துரை பெற வேண்டும். இந்தப் பரிந்துரையைப் பெற்று மாநில ஆணையர் அலுவலகத்துக்கு ஜூலை 5-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மனித கரு ஸ்டெம்செல்சிகிச்சையில் புதிய திருப்பம்
சென்னை, ஜூன் 10 –
மனித கரு ஸ்டெம்செல்களை கொண்டு பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை செய்யமுடியும் என்று ஆய் வில் தெரியவந்துள்ளது. இந்தசெல்களின் பயன்கள் மற்றும் பாதுகாப்பு குறித்தும் அதனை கொண்டு பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை செய்தால் மனித குலத்திற்கு நல்ல பயன் கிடைக்கும் என்றும் நுயூடெக் மெடிவேர்ல்டு மருத்துவ இயக்குநரும் பிரபல மருத்துவருமான டாக்டர் கீதா ஷார்ப் கூறியுள்ளார்.இந்த மருத்துவ ஆய்வு முடிவுகளை பிரபல மருத்துவ நிபுணர்கள் முன்னிலையில் யபிரதமரின் பொருளாதார ஆலோசகர் டாக்டர் சி.ரங்கராஜன் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து “மனித கரு ஸ்டெம் செல் தெரபி : இந்தியாவில் இருந்து வாழ்க்கை மாற்றத்திற்கான புதிய கண்டுபிடிப்பு’’ என்ற தலைப் பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் புகழ்பெற்ற யேல் மருத்துவ பல்கலை கழக டாக்டர் அமிராம் கட்ஸ் சிறப்புரையாற்றினார்.திசு இறுகிபோதல், பெருமூளை வாதம், பக்க வாதம், முதுகுதண்டு காயம் உள்ளிட்ட பல பெரும் நோய்களுக்கு இந்த மனித கரு ஸ்டெம் செல் சிகிச்சை பயன்படும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வை கண்டுபிடித்த மருத்துவர்களை டாக்டர் ரங்க ராஜன் பாராட்டினார்.கடந்த 10ஆண்டுகளில் ஆயிரத் திற்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் இந்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டது என்று டாக்டர் கீதா கூறினார்.
துணைவேந்தர் கேட்டுக்கொண்டதால் ராஜினாமா செய்தேன்சென்னை பல்கலைக்கழக பதிவாளர் விளக்கம்
சென்னை, ஜூன் 10 –
சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பொறுப்பு மற்றும் தேர்வு கட்டுப்பாட்டாளர் பதவியில் இருந்து பின்னர் பதிவாளர் பொறுப்பை ராஜினாமா செய்த வர் லியோ அலெக்சாண்டர். இப்போது அவர் சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் ஆக இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: 2011 ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சென்னை பல்கலைக்கழக தொலை தூரக்கல்வி தேர்விலும், பி.இ. தேர்விலும் நடந்த முறைகேடுகளை கண்டுபிடித்தேன். உடனே அதை துணைவேந்தர் கவனத்திற்கு எடுத்துச் சென்றேன். பின்னர் அந்த முறைகேடு குறித்து விசா ரணை நடத்த 4 சிண்டிகேட் உறுப்பினர்கள் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டியின் அறிக்கை சிண்டிகேட் கூட்டத்தில் வைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜூன் 7 ந் தேதி துணைவேந்தர் அவரது அறைக்கு என்னை அழைத்தார். அப்போது சிண்டிகேட் உறுப்பினர்கள் 7 பேர் இருந்தனர். துணை வேந்தரும் சிண்டிகேட் உறுப்பினர்கள் 7 பேர்களும் என்னிடம் நீங்கள் இனிமேல் தேர்வு கட்டுப்பாட் டாளர் பணியை மட்டும் பாருங்கள் கூடுதல் பொறுப்பு வகிக்கும் பதிவாளர் பணியில் இருந்து விடுபடுங்கள் என்று கூறினார்கள். துணைவேந்தர் ஜி.திருவாசகம் கேட்டுக்கொண்டதின் பேரில்தான் பதிவாளர் பதவியை ராஜினாமா செய்தேன். தேர்வில் முறைகேடு நடந்ததற்கும், எனது ராஜினாமாவுக்கும் தொடர்பு கிடையாது என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.