கிருஷ்ணகிரி, ஜூன் 10-
கிருஷ்ணகிரி மாவட் டம் கல்கேரி கிராமத்தில் தீண்டாமையை கடைப் பிடிப்போருக்கு துணை நின்ற அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்துவதை தடுக்கும் நோக் கத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சேகர் கைது செய்யப் பட்டுள்ளார்.பொய் வழக்கை கை விட்டு ஆர். சேகரை விடு விக்க வேண்டும். கல்கேரி கிராமத்தில் தலித் மக்களது வழிபாட்டு உரிமையை மீட் டுத்தரவும் சாகுபடி நிலங் களுக்கு செல்ல விடாமல் ஏற்படுத்தியுள்ள தடை களை அகற்றவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிருஷ்ண கிரி மாவட்ட சிபிஎம் செய லாளர் ஜி. சேகர் கேட்டுக் கொண்டுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:கிருஷ்ணகிரி மாவட் டம், தேன்கனிக்கோட்டை வட்டம் கொடியாளம் ஊராட்சியில் உள்ளது கல் கேரி கிராமம். இங்குள்ள கரகம்மன் மற்றும் ஆஞ்ச நேயர் கோயில்களில் தலித் மக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு வந்தது. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ஆலய நுழைவு போராட்டம் நடத்தப்பட் டது. அதன் தொடர்ச்சியாக கடந்த 1.1.2009 அன்று ஓசூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் தலித் மக்களை ஆலய நுழை வுக்கு அனுமதித்தனர். இத னால் ஆத்திரமடைந்த ஆதிக்க சாதியினர் சிலர் தலித் மக் கள் மீது தொடர் தாக்குதல் நடத்தினர். இது குறித்து தளி காவல் நிலையத்தில் 13 புகார் கள் தலித் மக்களால் கொடுக்கப்பட்டுள்ளன. கோட்டாட்சியர் தலை மையில் 5 முறை அமைதி பேச்சுவார்த்தை நடந்து சமாதான ஒப்பந்தம் ஏற்பட் டது. அதன்படி தலித் மக்க ளின் வழிபாட்டு உரிமை மற் றும் சாகுபடி நிலங்களுக் கான பாதை ஆகியவற்றை மாவட்ட நிர்வாகம் உறுதிப் படுத்தியது. ஆனால் கோவி லுக்குள் தலித் மக்கள் சென்றதால் தீட்டு ஏற்பட்டு விட்டதாக கூறி சிலைகளை ஆதிக்க சாதியினர் அகற்றி னார்கள். தனி நபருக்கு சொந்தமான பட்டா நிலத் தில் புதிய கோயில்களை கட் டினார்கள்.
10.4.2011 அன்று தளி காவல் நிலையத்திலும் 27.5.2011 அன்று ஒசூர் சாராட்சியர் அலுவலகத்தி லும் இது குறித்து புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தலித் மக்களுக்கான வழிபாட்டு உரிமையை மறுத்து கடந்த 15.5.2012 அன்று புதிய கோயில்களில் பழைய சிலைகளை வைத்து திருவிழா நடத்தினார்கள். ஆதிக்க சாதியினருக்கு பாது காப்பு கொடுத்த தேன்கனிக் கோட்டை வட்டாட்சியர் எம். ரவி, காவல் உதவி ஆய் வாளர் முகுந்தராஜ் ஆகி யோர் தலித் மக்களின் வேண்டுகோளை நிராகரித் துள்ளனர். இது போல் தலித் மக்கள் தங்களது சாகுபடி நிலங்களுக்கு செல்ல முடி யாத அளவுக்கு பாதைகள் அடைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான தலித் மக் களின் புகார் மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப் படவில்லை.தாழ்த்தப்பட்டோர் மற் றும் பழங்குடியினர் ஆணை யத்தின் உறுப்பினர் லதா பிரியகுமாரிடம் 30.06. 2011 அன்று மாவட்ட ஆட்சியர கத்தில் நடந்த ஆய்வு கூட் டத்தில் மனு கொடுத்தோம். ஆனால் 4 மாதங்களுக்கு பிறகு உண்மை நிலைக்கு மாறான அறிக்கை ஒன்றை மாவட்ட நிர்வாகம் ஆணை யத்துக்கு அனுப்பியுள்ளது. இந்த சூழ்நிலையில் தலித் மக்களின் ஆலய வழிபாட்டு உரிமை மறுப்பு மற்றும் பாதை அடைப்புக்கு எதி ராக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியியும் வட்டாட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
11.6.2012 அன்று தேன்கனிக் கோட்டையில் இப்போராட் டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை கட்சியின் வட்டச் செயலாளரும், மாவட்ட செயற்குழு உறுப்பின ருமான ஆர். சேகர் செய்து வந்தார். திடீரென சனிக் கிழமை நள்ளிரவு வீட்டிலி ருந்த ஆர். சேகரை காவல் துறையினர் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். தீண் டாமை கொடுமைக்கு எதி ரான போராட்டத்தை ஒடுக் கும் காவல்துறை நடவடிக் கையை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கிருஷ்ண கிரி மாவட்டக்குழு வன்மை யாக கண்டிக்கிறது. தீண் டாமை பாராட்டுவோருக்கு ஊக்கமளிக்கும் அதிகார வர்க்கத்தினர் மீது நட வடிக்கை எடுக்குமாறு தமி ழக அரசையும் தாழ்த்தப் பட்டோர் மற்றும் பழங் குடியினர் ஆணையத்தை யும் கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு ஜி. சேகர் தனது அறிக்கையில் குறிப் பிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: