வேலூர், ஜூன் 10-
வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூர் ஊராட்சியில் குடிநீர் குழா யில் கேட் வால் பொருத்தி குடிநீரை தடுத்த சமூக விரோதிகள் மீது நடவடி க்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறி யலில் ஈடுபட்டனர்.வேப்பூர் ஊராட்சியில் உள்ள வேலூர் சாலை அம் பேத்கர் தெரு, பெரியார் தெரு, பஜனை கோயில் தெரு உள்ளிட்ட தெருக் களில் கடந்த 6 மாதங்களாக குடிநீர் வராமல் இருந்தது. இது குறித்து அப்பகுதி மக் கள் பல முறை அதிகாரிகளி டம் முறையிட்டும் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் அப்பகுதி மக்கள் சிலர் தங்கள் பகுதிக்கு வரும் குடிநீர் மெயின் குழாயை ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டிப்பார்த்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒருவர் ஆறு தெருக் களுக்கு குடிநீர் செல்லாமல் இருக்க கேட்வால் ஒன்றை பொருத்தி தண்ணீர் வராமல் தடுத்திருந்தது தெரிய வந்தது.இதனால்ஆத்திரமடைந்த பொதுமக்கள் வேப்பூர் அம் பேத்தகர் சிலை அருகே காலி குடங்களுடன் ஆற்காடு வேலூர் சாலையில் மறிய லில் ஈடுபட்டனர். தலித் மக் கள் வாழும் பகுதிக்கு தண் ணீர் செல்வதை தடுத்த சமூக விரோதிகள் மீது நட வடிக்கை எடுக்க வலிறுத் தினர்.இத் தகவலறிந்த ஆற் காடு காவல்துறையினர் அப் பகுதிக்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட் டனர். பின்னர் சமூக விரோ திகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர் . இதனையடுத்து பொதுமக் கள் கலைந்து சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: