திருப்பூர், ஜூன் 10-
திருப்பூர் ரயில் நிலையத் தில் தனியாக இருந்த பெண் ணிடம், நூதன முறையில் நகை பறித்த பெண்ணை சம்பவம் நடந்த ஒரு வருடத்துக்கு பின்னர் நகையை பறிகொடுத்த பெண்ணே போலீசில் பிடித்து ஒப்படைத்தார்.திருப்பூரையடுத்த குலாம் காதர் லே அவுட், 5வது வீதி யைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மனைவி தமிழ் இலக்கியா (19). இவர் கண வருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருப்பூரில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 16ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய தமிழ் இலக்கியா எங்கு செல்வது என தெரியாமல் திருப்பூர் ரயில்நிலையத்தில்காத்திருந்தார். அழுத படி ரயில்நிலைய காத்திருப் போர் அறையில் இருந்த தமிழ் இலக்கியாவிடம், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண் டத்தைச் சேர்ந்த கணேசன் (27), அவரது மனைவி முத்து லட்சுமி(27) ஆகியோர் வந்து பேசியுள்ளனர். கணவர், பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறித்து கேட்டறிந்த அவர்கள் இரு வரும், தங்களின் சொந்த ஊரான ஸ்ரீவைகுண்டம் செல்லலாம் என அழைத் துள்ளனர்.
இதற்கு தமிழ் இலக்கியா ஒப்புதல் தெரி வித்தார்.இதையடுத்து அன்று இரவு தமிழ் இலக்கியாவை கோவை அழைத்துச் சென்ற இருவரும், அங்குள்ள ஆசிரமம் ஒன்றில் தங்க வைத்தனர். அப்போது அவரி டம் இருந்த மூன்றரை பவுன் தங்கசெயினை பெற்றுக் கொண்டனர்.காலையில் வந்து ஸ்ரீவைகுண்டம் அழைத்து செல்வதாக கூறி சென்றவர்கள் திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோருக்குபோன் செய்து தமிழ் இலக்கியா வீடு திரும்பினார்.இது தொடர்பாக திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் தமிழ் இலக்கியா புகார் அளித்தார். ஆனால் தகவல் கள் ஏதும் முழுமையாக இல்லாததால் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இந்தசூழலில் வியாழனன்று மாலை சாமுண்டிபுரத்தில் தமிழ்இலக்கியா நடந்து சென்று கொண்டிருந்த போது, தன்னிடம் நகையை ஏமாற்றி பறித்த முத்துலட்சு மியை கண்டார். தொடர் ந்து அவரை பிடித்த தமிழ் இலக்கியா, போலீசாருக்கு தகவல் அளித்தார். தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார் முத்துலட்சுமியை கைது செய்து சிறையில் அடைத் தனர்.

Leave A Reply

%d bloggers like this: