வேலூர், ஜூன் 10-
தொழிலாளர் விரோத மத்திய- மாநில அரசுகளை கண்டித்து நாடுதழுவிய வேலை நிறுத்தம் பிப்.28ல் நடந்தது.தமிழக அரசின், தொடக் கக்கல்வி இயக்குநரின், மாவட்ட ஆட்சியரின், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் எந்தவித எழுத்துப்பூர்வமான ஆணையும் இன்றி மே மாதம் ஒரு நாள் ஊதியத்தை பிடித்த சோளிங்கர் ஒன்றிய உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சி. சித்ராவின் அடாவடி போக்கை கண்டித்து தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரி யர் கூட்டணி சார்பில் கண் டன தர்ணா போராட்டம் நடந்தது.
சோளிங்கர் உதவி தொடக்கக்கல்வி அலுவல கத்தில் ஆசிரியர்களுக்கு பல மாதங்களாக டிபிஎப் கடன், சரண்டர் வழங்காததை கண் டித்தும், அலுவலகத்தில் ஒரு அலுவலர், ஒரு உதவி யாளரை தவிர மற்ற அனைத்து பணி இடங்க ளும் காலியாக உள்ளதை கண்டித்தும் ஊழல் முறை கேடுகள் நிறைந்த அலுவ லக செயல்பாடுகளை கண் டித்தும் சோளிங்கர் உதவி தொடக்கக்கல்வி அலுவல கம் முன்பு தர்ணா நடந்தது.வட்டத் தலைவர் செ. ஆதித்தன் தலைமையில் நடந்த தர்ணாவில் மாவட் டச்செயலாளர் செ. சரவணன், வ. கமலநாதன், செ. ரவிச்சந்திரன் (மாபெ) சி. முருகன் (மாவட்டத் தலைவர்) வீ. டார்வீன், எஸ். கிருபாகரன், எம். செல்வம் உள்ளிட்டோர் பேசினார் கள்.தர்ணாவில் என். காசிநா தன் (சிஐடியு மாவட்டச் செயலாளர்) தா. வெங்க டேசன் (சிபிஎம் செயற்குழு) நிலவு குப்புசாமி (விச) உள் ளிட்ட பலர் வாழ்த்தி பேசி னார்கள்.

Leave A Reply