சென்னை, ஜூன் 10 –
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை கீழ் இயங்கும் மாற்றுத்திறன் மாணவ மாணவிகள் உள்ளடக்கிய இடைநிலை கல்வி திட்டத்தின் சார்பாக, பிளஸ் 2 முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என்று ஆலோசனை வழங்குவதற் கான 2 நாள் பயிற்சி முகாம், சென்னை ராமாவரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். பேச்சு மற்றும் காதுகேளா தோர் இல்லம் மேல்நிலைப்பள்ளியுடன் இணைந்து நடத்தப்பட்டது.பள்ளிக்கல்வி துறை செயலாளர் த.சபீதா குத்துவிளக்கு ஏற்றி பயிற்சி முகாமை தொடங்கிவைத்தார். அரசின் சலு கைகளை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண் டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ப.மணி, இணை இயக்குனர் எஸ்.கண்ணப்பன், துணை இயக்கு னர் சீனிவாசன், பள்ளியின் முதல்வர் லதா ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply